பொறியாளர். வீ. இளங்கோவன்


அகர முதல
அறிந்தது உன்னால்...
ஆயுளின் பாதி
அனுபவமும் உன்னால் ...
என்னின் சாதனைகளும்
உன்னால் அமைந்திட,
ஆசிர்வதிப்பாயாக
அண்ணா!...

-- வீ.இளவழுதி

என்று வருவாய்...


புல்லின் மீது விழுந்த
பனி துளி போல
எனக்குள் விழுந்தவளே என்று
வருவாய் என் முன்னாள்?....
--வீ.இளவழுதி

வழித்துணை...


உன்னை பற்றிய என்
எண்ணங்களை உடைத்து
உன்னின் ஒவ்வொரு செயலிலும்
எனது எண்ணங்களுக்கு செயல்
வடிவம் தந்து வாழ்வின்
வழித்தடம் காட்டியவளே...
வழித்துணையாக நீ - என்
வாழ்வில் வருவது எப்போது?
--வீ.இளவழுதி

மீண்டுமொரு முறை

ஆயிரமாயிரம் மனிதர்கள்
பணிபுரியும் அலுவலகத்தில்...
யாருமற்ற தனிமையில்
ஒரு நாள்....
உன் அருகில்
ஒரு முழு நாள்...
உன்னுடன் பரிமாறிக்கொண்ட - அதே
தகவல்களை கூட
அலுக்காமல் மீண்டுமொரு முறை
அசை போட்ட நாள்...
ஒரே உணவினை உன்னுடனிருந்து
சுவைத்திட்ட நாள்...
ஊரைப்பற்றி கவலைப்பட்டு;
உன்னருகில் அமர அச்சப்பட்டு;
ஒரே பேருந்தில்
ஒரு சேர பயணித்த நாள்...
கவலைப்பட்ட ஊரைப்பற்றி
கவலை இன்றி - உன்னுடன்
நடந்து சென்ற வீதிகள்... கடைகள்....
ஒரு வருடமாக தவமிருந்த
இந்த திருநாள்
மீண்டுமொருமுறை வாய்த்திடாதா?...
--வீ.இளவழுதி

என்னவளே...

அமைதியின் மறு உருவாய்
அலைபாயும் உன் கண்கள் ...
தனிமையுடன் தாலாட்டு பாடும்
உனது குணம் ...
மெலிதான சோகம் இழையோடும்
உன் முகம் ...
அதிர்ந்து விழாமல் வந்துவிழும்
ஒரு சில வார்த்தைகள்...
எளிமையின் வெளிப்பாடான
உனது அலங்காரம் ...
இப்படியாக என்னை
மொத்தமாக ஈர்தவளே...
என்னுடன் உன் வாழ்வை
பரிமாறிக்கொள்ளும் நாள்
என்று அமையும் கண்மணி ...
---வீ.இளவழுதி காளிங்கராயர்

காதலை யாசிக்கின்றேன்...

கல்லூரி வந்த புதிதில்
களங்கமில்லா மனிதர்கள் மத்தியில் - உன்
சிநேக புன்னகையில் சிநேகிதனானேன் ...
கிடைத்த தருணங்களில் ...
பரிமாறிக்கொண்ட தகவல்களில்...
ஒருவருக்குள் ஒருவர் ஒட்டிக்கொன்டோம்
ஏதோ ஒரு தருணத்தில்
ஏதோ ஒரு கணத்தில் ...
நீ எனக்குள் காதலியாக
எனக்கே தெரியாமல் மாறிப்போனாய்..
இத்தனை நாளாக சொல்லாத
காதலை கல்லூரியின்
கடைசி நாளிலும் சொல்லாமல்
செல்லலாம் தான் - ஆனால்
பின்னாளில் ஒரு நாள் - நீ
என் முன்னால் வந்து
அன்றே சொல்லி இருந்தால்
உன்னை ஆராதித்திருப்பேனே
என சொன்னால் ....
தூண்டிலிட்ட புழுவாய்
துடித்தல்லவா போகுமென்மனம்
எனவே தான்
உன்னை தொலைத்து விடாமலிருக்க
உனக்குளிருக்கும் காதலையும் யாசிக்கிறேனடி !....
--வீ.இளவழுதி.அன்னிய தேசத்தில் நீ....


கவலைகளை மறந்து கண்மூடி
உறங்கும் நேரம் ....
பகலின் மற்றொரு முகமாம்
இரவினை ரசிக்கும் நேரம்...
நிலவின் தரிசனம்
காணும் நேரம்....
மலரின் அழகை வேறு
பரிணாமத்தில் பார்க்கும் நேரம்....
பறவைகளின் இசைக்கச்சேரி
கேட்கும் நேரம்...
அம்மாவின் தாலாட்டில்
குழந்தை உறங்கும் நேரம்....
இளையராஜாவின் இன்னிசையில்
கண்ணயரும் நேரம்...
ஐம்புலனுக்கும் சற்றே
ஓய்வழிக்கும் நேரம்...
ஆனால்
ஏனோ இவை எல்லாம் - என்
நினைவுக்கு வரவில்லை - உன்
குரல் கேட்கும் நேரம்
இது என்பதால்....
--வீ.இளவழுதி

நினைவுகள்...

உயிர் இன்றி
உணர்வுகள் இல்லை .....
உன் நினைவுகளின்றி
நான் இல்லை ....
--வீ.இளவழுதி

என் வாழ்வே....

என் எண்ணங்களில் நீ!
என் எழுத்துக்களில் நீ!
என் சிந்தனையில் நீ!
என் கனவினிலும் நீ!
என் கவிதையும் நீ!
என் வசந்தமும் நீ!
என் வாழ்வாய்
வருவாய் நீ!....
-வீ.இளவழுதி

என்னை ஆக்கிரமித்தவளே ...


மெல்ல மெல்ல
உன் நினைவுகளால்
என்னை ஆக்கிரமித்தவளே ...
என்று என்னை முழுதாய்
அரவணைப்பாய்? .......
--வீ. இளவழுதி, பின்னையூர்

விதியின் தவறா?

தாய்மையை என்னிடம் - நீ
உணர்ந்து கொள்ள...
தாரமாய் நான் - உன்னை
நினைத்துக்கொள்ள
தடுமாறியது என் தவறா?
தடுமாற வைத்த
விதியின் தவறா?
-- வீ.இளவழுதி

பாசம்...

புரியாத பாசம்
பிரியும் போது
புரியும்....
எங்கோ கேட்டது
உன்னிடம் உணர்ந்தது.....
--வீ.இளவழுதி

உன் நினைவுகள்...
உனது ஒரு பார்வை கூட
என்னை தீண்டியதில்லை ஆயினும்
உன் நினைவுகளில் மட்டுமே கழிகின்றது
என்னின் ஒவ்வொரு பொழுதும்....
-- வீ. இளவழுதி காளிங்கராயர்

யாசிக்கிறேனடி....

உனக்கு பிடிக்காது என்பதால்
நான் இழந்தவைகளும்....
எனக்கு பிடிக்கும் என்பதால் - நீ
கற்றுகொண்டவைகளும் மட்டுமே
நம் காதலை வலுப்படுத்தவில்லை...
நமக்கான வாழ்வின் பரஸ்பர நம்பிக்கையும் - புரிதலுமே
நம் காதலை மேலும் அழகாக்கியது....
எனக்கான உன் தவிப்பும்
உனக்கான என் அக்கறையும்
நம் காதலை இன்னும் மெருகேற்றுகிறது...
உன் மீதான என் பொய் கோபமும்
என் மீதான உன் பொய் சண்டையும்
நம் காதலை இன்னும் வாழவைக்கிறது...
இப்படியான நம் காதலில்
நமக்கான குழந்தை
நம் காதலை அர்த்தமுள்ளதாக்கியது...
இப்படியே தொடரும் நம் காதலில்
உன் மடி மீது என் உயிர் பிரியும்
வரம் வேண்டி நம் காதலிடம் யாசிக்கிறேன்.....
--- இளவழுதி வீரராசன்