என் புதினமே!

ஓரிரண்டு வருடம்
ஒளிந்து விளையாடி
ஒரு வழியாக
உன்னை சந்தித்தேன் -
ஒரு நாள்!...
அயல் தேச பயணம் செல்வதாக
அவசர கதியில் விடை பெற்று
உன் நினைவுகளை தந்து
என் நிஜத்தை எடுத்து சென்றாய்!...
மீண்டும் - உன்
தரிசனம் காண தவமிருந்தேன்
ஆறிரண்டு மாதம்;
நித்தம் நித்தம்
நாள்காட்டி முன்
நாழிரண்டு நாளிகை
நான் நின்று
ஒரு வழியாக
ஒரு வருடம் கடந்து - நீ
வரும் நாள் வர - உன்
முகம் -
நான் கண்டிட ....
வசந்தமே - நீ
வரும் வாசல்
வந்து காத்திருக்க
வழக்கம் போல
விதி சதி செய்து - உன்
தரிசனம் பெரும்
பாக்கியத்தை தடுத்தது !....
நாள் முழுக்க உன்னுடன் பேசிய
தொலைபேசியில் உன்
குரலாவது கேட்குமா - என
என் உள்மன உந்துதலில்
உறங்கும் நேரம் கூட
காத்திருக்கிறேன்...
தங்கமே! தாமரையே!...
என் புதினமே! புவனமே!
புதிராய் - நீ
மாறிப்போனதேனடி!....
--வீ. இளவழுதி