முதல் பார்வை

நானாக இருப்பேனோ
என்றும் தெரியாமல் ;
நான் தானா
என்றும் புரியாமல் ;
உன் வாழ்வில்
மறக்க இயலா
மங்கள நாளில்…
மலங்க மலங்க
முழித்து - நீ
பார்த்த அந்த - ஒரு
பார்வையை என்
வாழ்நாள் முழுக்க
மறக்க இயலாது தோழி.....

முதல் தரிசனம்....

மூன்றாண்டுகள் என் குரல்
மட்டும் கேட்டவள் - இன்று
முதல் முறையாக - என்
முழு உருவ தரிசனம் காண்கிறாள்;
முழுதாய் ஒரு வார்த்தை
பேச இயலாமல் ...

என் பயணங்கள்....

நெஞ்சமெல்லாம் உன்னை பற்றிய
எதிர்பார்ப்புகளும்.....
சிந்தனை எல்லாம் உன்
நினைவுகளுமாக....
தொடர்கிறது என் பயணங்கள்....
--வீ. இளவழுதி