என் வாழ்வாக வந்தவளே....

என் இரண்டாம் பணியின்
முதல் தோழியானவளே - உன்
உயிர் வாங்கிய புன்னகையில் - நீ
என் வாழ்வில் முதன்மையானவளானாய்.....

உருண்டோடிய நாட்களில் - உன்
உண்மையான அன்பில் - உயிர்
கசிந்து உன் சிநேகிதனானேன்.....

என் வழிகாட்டுதலில்
வளம் காணுவதாக நீ
கூறிய நொடிகளில் - என்
வாழ்வில் மெல்ல மெல்ல
வசந்தங்களை கொண்டு வந்து
வாசம் செய்ய துவங்கினாய்.....

உனக்காக நான் செதுக்கிய
கவிதைகளை - நீ
படித்த நொடிகளில் ....
சிவந்த உன் கன்னங்கள்
மேலும் நாணத்தில் சிவக்க...
உன்னருகில் நானிருந்து உன்
வெட்கத்தை ரசித்த நொடியில் - நீ
என் காதலியாக மாறிப்போனாய்.....

உன்னோடு நான் சென்ற
இடங்கள் எல்லாம் - உன்
வருகையால் மேலும்
அழகானதை - என்
கண்ணில் நீ
கண்ட காட்சியில் - என்
வாழ்வாக வாசம்
செய்ய துவங்கினாய் .....

அலுவலக நேரங்களில்
அலுவல் இல்லா நேரங்களில்
என்னருகில் நீயோ - இல்லை
உன்னருகில் நானோ ....
நமக்கான வாழ்வைப்பற்றி
மட்டுமின்றி வரம்பின்றி
நாம் விவாதித்த விசயங்கள்....

என்னைப்பற்றி உன் வீட்டாரும்
உன்னைப்பற்றி என் உறவுகளும்
உயர்வாய் மதித்த தருணங்கள்
என
இப்படியாக நம்மைப்பற்றி
சொல்ல ஓராயிரம் இருக்க....

காலதேவனின் இரக்கமற்ற.......
உறவுகளின் இதயமற்ற........
மனதிற்க்கு ஒப்பாத
காரணம் சொல்லி - நம்
கனவு வாழ்வை
மெய்ப்பட செய்யாத
சொந்தங்களும் பந்தங்களும்
நம்மை பிரித்த சந்தோசத்தில்
திலைக்க.....

எறும்புக்கு கூட தீங்கிழைக்காத - நீயும்
எவர் மனதும் புண்படாது வாழும் - நானும்

நமது காதலின் வெற்றியை
மற்றவர்களின்
சந்தோசத்துக்காக சமர்ப்பித்து
காலத்தை வெல்ல இயலாமல்
கரை ஒதுங்கிணோம்
இரு வேறு திசைகளில்
இருவரும்.........
-- வீ இளவழுதி