இந்த ஒரு நொடிக்காக...

கண் மூடிபடுத்தால்
உறக்கம் வரவில்லை;
உறக்கம் வந்தாலும்
கனவு வருவதில்லை;
கனவு வரும்போதிலும் – அதில்
கண்மணி நீ வருவதில்லை – என
மன உளைச்சலில் மருகி;
அதிகாலையில் உறங்கி ;
தாமதமாய் எழுந்து;
அவசரகதியில் இயங்கி;
நெருசலில் சிக்கி;
வியர்வையில் நனைந்து;
மனம் வெறுத்து
அலுவலகம் நுழைகையில்
அருகினில் உன் தரிசனம்;
எல்லாம் மறந்து
ஒரு நிமிடம்
மனம் லேசாகிறது
புதிதாய் பிறந்ததாய்
என்னி மனம் கூதுகளிக்கிறது...
இந்த ஒரு நொடிக்காக...
இது போல ஓராயிரம்
இன்னல்களை கடந்து வரலாம்....
-- வீ. இளவழுதி

தேவதையின் தரிசனம்...

காற்றில் உந்தன்
குரல் கேட்டு
கற்பனையில் உயிர்
வளர்த்து - உன்னை
காணும் தருணத்திற்காக
வரம் வேண்டி...
இறைவன் சன்னதியில்
காத்திருக்க.....
வரம் தரும் அம்மனாக
வந்தாய் என்னருகில்...
வார்த்தைகளில் வர்ணம்பூசி
வரவழைத்தவன்- உன்னை
கண்ட தருணத்தில்
வாயடைத்து நிற்கிறேன்- பேச
வார்த்தைகளின்றி!....
-வீ. இளவழுதி, பின்னையூர்

முதல் கவிதை..

என்னின் முதல் கவிதை
உன்னின் கோபத்தி(தீயி)ல்
கருகிய போதும்
என்னிலிருந்து
கவிதைகள் பல பல
காற்றினிலே கலந்து
வருகின்றன – வசந்தமே
வாசிக்க நீயின்றி...

-- வீ.இளவழுதி

பூண்டி ஐயா...


ஏர் பிடித்த
எங்களின் வாழ்வை...
ஏற்றமிகு
கல்வியால் வளம்
கான செய்த
வள்ளலே!... - எங்கள்
கல்வி காவலரே!...
கல்வியை கொடையாய்
தருவதில் கடையேழு
வள்ளலையும் மிஞ்சியவரே!....
உங்கள் வழி காட்டுதலில்
வளம் காணுவதில்
பெருமையடைகிறோம்....
--வீ.இளவழுதி, பின்னையூர்

சாரல்....


கண்களுக்கு காவியம் நீ...
செவிகளுக்கு இன்னிசை நீ ...
நாவிற்கு அறுசுவை நீ ...
மார்கழியின் மறுவடிவம் நீ...
சித்திரையின் எதிர்பதம் நீ...
இயற்கையின் வரம் நீ...
எங்களின் தவம் நீ...
மலைகளின் கூந்தல் நீ...
மனைவியை மறக்கச்செய்பவலும் நீ ...
மழையின் மகத்துவம் நீ ...
அருவியின் அற்புதம் நீ...
சாரலின் அழகு ....
மலையிலா? .. அருவியிலா?
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
சாரலே...
நீ தான் அழகு....
--வீ.இளவழுதி

கரம் பிடிப்பேன் கண்மணி...


ஊரே எதிர்த்தாலும்...
உன்னை தர மறுத்தாலும்...
உன் மனதில் நானிருந்தால் ..
உன்னை கரம் பிடிப்பவன்
நானாகவே இருப்பேன் கண்மணி...
--வீ.இளவழுதி

என்றென்றும் காத்திருக்கும் ....

என் நினைவே
உன்னை தீண்டாவிடிலும்
உன்
இதயத்தின் ஓரத்தில்
உன்னையும் அறியாமல்
ஒட்டியிருக்கும் -
என் பிம்பம்
என்றாவது கஷ்டப்படும்
நொடியில் நீ
தோள் சாய்ந்து இளைப்பாற
என்றென்றும் காத்திருக்கும் ....
--வீ.இளவழுதி

அப்பா...மொழிப்போர் தியாகி
உ. வீரராசன் காளிங்கராயர்

ஈடில்லை ...
இணையில்லை ...
உங்கள் நினைவுகளின்றி,
இறுதி வரை
துணையில்லை....
--வீ. இளவழுதி காளிங்கராயர்
கலைந்து போன கனவுகள்

உறவுகளின் உந்துதலால்
காலத்தின் கட்டாயத்தால் - நீ
என்
கரம் பிடிக்கும் நாழிகை
காற்றோடு கலந்து விட்டாலும்
காரிகையே ...
கடக்க இருக்கும் காலங்களில் - உன்
வாழ்வில் வசந்தங்கள் சேர்க்க
வண்ணத்து பூச்சியாக உன்
வாசல் வந்து சேர்ந்திடுவேன்
நீ ...
மகிழ்வின் எல்லை சென்றிட
உன் மகளோ மகனோ
நம் எண்ணங்களுக்கு
உருவம் தந்து உயர்ந்திட
ஒவ்வொரு கணமும் - என்
முருகனை பிரார்த்தித்துக்கொண்டிருப்பேன்
கண்மணி ...
--வீ. இளவழுதி

நமது வாழ்வு ...

உன்னின் ஒவ்வொரு
நொடியிலும் - உடனிருந்து
உனது வெற்றிகளுக்கெல்லாம்
ஊன்றுகோளாக இருந்து
உன்னை உற்சாகப்படுத்திடவேண்டும்

என்னவளின் திருக்கரங்களால்
எண்ணற்ற வெற்றி மாலைகள்
என் தோள்களை
அலங்கரிக்க வேண்டும்

இயற்கையின் அழகினை
இயன்றவரை உன்னுடன்
இருந்து இன்புற்று
ரசித்திட வேண்டும்

இப்படி எண்ணற்ற
ஆசைகளை என்னுள்
சுமந்து திரிகின்றேன்
என்னவளே
என்று நிஜமாகும்
நமது கனவுகள்....
-- வீ. இளவழுதி