என் உள்ளுயிர்

பத்தோடு பதினொன்றல்ல - நான்

தனித்துவமானவன்

என்பதால் தானோ - உன்

புன்னகையை - எனக்கு

பொன்னகையாக்கி

புத்தொளி பெறச்செய்தாய்!...

பின் ஏனடி என்னை

பிரிந்து சென்று உள்ளுயிர்

பறித்து சென்றாய்!...

வழிப்போக்கனின் வார்த்தைகள்...

தமிழ் போல என்னுள்

தங்கிய என் வேதமே !.... நிவேதமே!...

தன்னை பற்றி மட்டுமே

தனிப்படுத்தி காட்ட முயலும் - உலகில்

தாயைப்போல மற்றவர்களும்

தழைத்து வாழ வேண்டுமென

தவமிருப்பவளே!....

சோகங்கள் இங்கு பல உண்டு - ஆறுதல்

சொல்ல இயலாதவையும் சில உண்டு

இன்று - நானும்

உனக்கு ஆறுதல் சொல்ல

இயலாதவனாகவே உள்ளேன்!...

ஆயிரமாயிரம் பேர்

வார்த்தைகளில் ஜாலம் கோர்த்து

உன்னிடம் கொட்டி விட்டு சென்றாலும்

உன்னின் உண்மையான நேசம் மட்டும் - நீ

தோள் சாய்ந்து இளைப்பாற - உன்னை

அரவணைத்து தூக்கி விடும் -

அந்த தோழமையில் - நீ

அனைத்தையும் மறக்க வேண்டும்

புதிதாய் பிறந்ததாய் - எண்ணி;

சாதனைகள் நீ படைத்திட வேண்டும்

சரித்திரம் உன்னை பார்த்திட வேண்டும்

வார்த்தைகளை கோர்த்து உனக்கு

ஆறுதல் சொல்வதை விட

என் தோள் சாய்த்து அரவணைத்து

அழைத்து செல்லும் நட்பாக

இருக்க விரும்புவதால் சொல்கிறேன்

கவலை - நீ மறந்து ;

கணினியில் கரை கண்டிட

காலம் உன்னை போற்றிட

புதிய அத்தியாயம் - நீ படைத்திட

ஆறுதல் சொல்ல வந்த

வழிப்போக்கன் வாழ்த்துகிறேன்!...

- வீ. இளவழுதி

உன் உதட்டோர புன்னகை...

உன் மீது நான் கொண்ட காதல்

உணர்வுகளால் மட்டுமே!

காலம் நம் கனவுகளை

கலைத்தாலும் - என்

காதல் மட்டும்

கலையாது கண்மணி !...

எனக்காக எதையும் செய்வேன்

என்றவளே... என்னவளே !...

எதிர்வரும் காலங்களில்

என் எதிர்படும் நேரங்களில்

என் இதயம் மீண்டும் துடித்திட

என் உயிர் வாங்கிய

உன் உதட்டோர புன்னகையை தா!...

அது போதும் - எனக்கு

இன்னும் ஒரு ஜென்மம் வாழ்ந்திட !....

பிரிவு....

எனக்காகவே வளர்ந்தவள் போல
என்னை ஒட்டிய உன் உயரம்
அமைதியாக அலைபாயும் உன்
காந்த கண்கள் !....
நெற்றியின் மத்தியில்
அழகுக்கு அழகு சேர்க்க
அழகாக அமைந்த திருநீறு!...
செதுக்கி வைத்தார்ப்போன்ற
உன் நாசி!..
ரவிவர்மனின் தூரிகையில்
படைக்கபட்டதோ என
வியப்படைய வைக்கும்
உன் உதடுகள் !...
பள்ளாங்குழியினை
ஞாபகப்படுத்தும்
உன் கன்னக்குழி!...
என மொத்தமாக
என்னை கவர்ந்தவளே!...
உன்னுடன் வாழும்
வரம் வேண்டி...
ஒவ்வொரு நொடியும் - நான்
தவமிருக்க....
பந்தங்களின் பாசத்துக்காக
பாவியிவனை
பாதி வழியில்
பரிதவிக்க விட்டு விட்டு
சென்றதேன் கண்ணம்மா?
- வீ, இளவழுதி