அம்மா...

எனது 100 வது படைப்பு இது...


அய்யிரண்டு மாதம் என்னை
ஆசையோடு வயிற்றில் சுமந்தாய்...
அய்யாறு வருடம் என்னை
அன்போடு நெஞ்சில் சுமக்கிறாய்...
நவீன வசதிகள் இல்லாத கிராமத்தில்
நாகரிகமாய் எம்மை வளர்த்தாய்....
படுக்கை வசதிக்காக - உன் துணிகளையே
படுக்கையாய் எமக்கு மாற்றி தந்தாய்....
படிப்பறிவில்லாத நீ உன் பிள்ளைகளை
பட்டபடிப்புக்கு அனுப்பி தீருவேன் - என
சபதமேற்றாய்.... சத்தியம் செய்தாய்....
சற்றும் ஓய்வின்றி உன்
ஆயுளை எமக்காய் அர்ப்பணித்தாய் - உன்
ஆசைகளை எங்களுக்காய் புறந்தள்ளினாய் ....
என்ன தவம் யாம் செய்தோம்
எம் அன்னையாய் உன்னை பெற!..
என்ன செய்து எம் கடன் அடைப்போம்
உன் ஆசைகளை நிறைவேற்றுவதை தவிர!....


3 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இளவழுதி,

இன்று உன் 100வது படைப்பை படைத்தாய். மேலும் பல நூறு படைப்புகள் படைத்திட என் வாழ்த்துகள்.

Pinnai Ilavazhuthi said...

என் வாசமே...
என் நட்பே!
நன்றி !... உன்
வாழ்த்துக்களில்
வளம் காணுவேன்

Unknown said...

super pa...........