திருமண அழைப்பிதல்..

வாழ்க்கை எனும் பூஞ்சோலையில்...
எங்களையும் மணமுள்ள மலராக்கும்
எங்கள் இதயத்திலிருக்கும் தோழமையே...
எதிர்வரும் 12-02-2010 வெள்ளிக்கிழமை
காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணி துளிகள் வரை ...
குதுகலமூட்டும் இந்த நேரத்தை குறித்துக் கொள்ளுங்கள்!

ஆம்! இந்த காலை பொழுதில் ஆரம்பமாகிறது
உங்கள் நட்புகள் -

நாங்கள் இருகரம் பற்றும் இல்லறத் தொடக்கவிழா !
இந்த நாளில் உங்களின் வருகைக்காகவும் வாழ்த்துதலுக்காகவும்
ஒரத்தநாடு LGVK திருமண மண்டபத்தில் - மணவறையில்
வழிமேல் விழி வைத்து காத்திருப்போம்

எங்களை வாழ்த்தும் முப்பத்து முக்கோடி தேவர்களில்
நீங்களும் ஒருவர் என எண்ணி அகமகிழ்கிறோம்!
நீங்கள் வரும் பாதையிலே
எங்கள் ஆவலும், நட்பும் மலர் தூவி அணிவகுத்து நிற்கும்
உங்கள் வருகை எங்களுக்கு வசந்தம் ஆகட்டும்
உங்கள் வாழ்த்துக்கள் எங்கள் எதிர்வரும் சாதனைகளுக்கு விருட்சமாகட்டும்
மேகமாய் வந்து மழையாய் வாழ்த்துங்கள் ....
அந்த அன்பு மழையில் எங்கள் வசந்தமும் வரலாறாகட்டும்

அவசரமில்லாமல் வாருங்கள் - ஆனால்
அவசியம் வாருங்கள் ....

நட்பின் வரவை வாசல் வந்து வரவேற்று
தோழமையின் வாழ்த்தை சேகரிப்பது
இளவழுதி & மோகனா


16 comments:

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள தோழா! என் இளவழுதிக்கு...

உடல்வந்து உங்களை நேரில் வாழ்த்தமுடியாவிடினும், என்போன்ற எத்தனையோ அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துகள் அன்று(12.02.10)அல்ல இன்று இந்தநொடிப்பொழுதிலிருந்தே வாழ்த்தும்.

உடலும் உள்ளமும் என்றும் வசந்தகாலம் போல் வாழ்கையில் நிலைத்து இருக்க, நான் வணங்கும் கடவுள் மட்டுமில்லாது எல்லாரும் வேண்டும் அத்தனை இறைவன்களிடமும் வேண்டுகின்றேன் / வணங்குகின்றேன்.

உங்கள் இருவரையும், இல்லறம் தொடங்கும் தினம்போல் எந்நாளும் வாழ்கை அமைந்திட அனைவரின் சார்பிலும் வாழ்த்துகின்றேன்.

இவன்,
தஞ்சை.வாசன்
(ஒர் கல்லூரி தோழனாய்)

வைகறை நிலா said...

Wish u a very very happy married life.. May God bless u(two) alwaysss...

இளவழுதி வீரராசன் said...

thanks vaasan and nila.

Anonymous said...

hi vazuthi,
i am sankar.
pallandu pallandu vazha vazhthukkal.

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

Hi,

Who all are coming to your marriage from your B.Sc (C.S). Have you invited everyone? How is your friends Karthi, Rammoorthi, Raja, Prasanna, RamDoss, Saravanan and others...

Some time I have keep in touch with Karthi & Saravanan.

How is your marriage work going on?
Marriage Count down started...
Relax & Enjoy your life... We will be there always with you.

இளவழுதி வீரராசன் said...

Mukam ariya mugavari ariya en thozhamaiye sankare nantri

அண்ணாமலையான் said...

இப்பதான் படிச்சேன்.. வாழ்த்துக்கள்...

Anonymous said...

வாழ்த்துகின்றேன்..!!! உளமார..!!

தாமரையில் விழிசெய்து
தளிர்மலரில் முகம்செய்து..!!
காமனுக்குப் போட்டியனாய்
கதிரழகு படைத்திட்டோன்..!!
வானமுக வீதியிலே
வந்திறங்கும் வேளையிலே..!!
கானமி சைத்தபோதே
கண்ட தேவதை இவளோ..!!

ஆனபடி ஆகிவிட்ட
தனைத்தும் நன்மையிலே..!!
தானதவம் மட்டுமல்ல
காதலுமுலகைக் காக்கும்..!!
போனகதை புதுக்கதை
வந்தகதை யாவையுமே..!!
சேனைகாத்து நிற்குமிந்த
உறவிதனால் வலுப்பெறட்டும்..!!

காதலும் வீரமும் தமிழரின்
இரு கண்களப்பா..!!
கண்போலே கொண்டவளைக்
காத்திடவும் வேண்டுமப்பா..!!
ஏடுபடித்தோங்கி இறை
நட்பு வளர்த்திட்டாலும்
வீடுகாத்து நின்றாலே இறை
வீட்டிற் கிணையப்பா..!!

தேனிற்குழைத் தமுதத்
தெய்வப்பா வெனவே..!!
நாணம் கொண்டு நிற்கும்
நல்முத்தாய் மோகனமும்-அன்பு
பாணம் தொடுத்து நிற்கும்
இளம்வழுதியும் கைகோர்க்க..!!
வாணம்கிளப்பி இதை
வாழ்த்தியாம் மகிழ்கின்றோம்..!!

சூரியனுஞ் சந்திரனும்
சுடர்விளக் கேந்தி நிற்க..!!
மாரியுஞ் சகுனம் பார்த்து
மறந்தேதான் தேங்கி நிற்க..!!
பேரின்பம் நிறைந்து பல
பெரு நூற்றாண்டுகளாய்!!
பாரில் இன்புற்றிடவே யாம்
பாக்கள்கொண்டு வாழ்த்துகின்றோம்..!!தமிழர் வரைவின் படிநீர் வாழ்ந்து
தழைத்திட வேண்டும் புவியில் நூறாண்டு..!!
தென்றற்காற்றும் உமையே கூறி
தேனாய் மக்களைத் தழுவுது பாரீர்..!!
தொன்மைப்பாக்கள் மங்கலம் பாடி
தொலைவில் வாழ்த்தி ஒலிக்குது கேளீர்..!!
செண்பக மலர்கள் மல்லிகையோடு
சேர்ந்தே மகிழ்வாய்க் குலுங்குது காணீர்..!!

கெட்டிமேளங்கள் கொட்டி யிசைக்க..!!
மெட்டியை ஏற்று மெல்லிடையாள் வர..!!
தொட்டு அணைத்தே உளத்தில் நிறுத்தி...!!
கட்டுக் கோப்பாய் வாழ்க்கை வாழ்வீர்..!!
கேடற்றெந்நாளுங் கிளைஞர் செழிக்க..!!
உடலுமுயிருமாய் ஒன்று கலந்தின்புற்று..!!
தொட்டிடவேபல சிகரம்நாளும் .!!வாழ்த்திக்
கொட்டுகிறேன்மங் கலநாத மேளம்..!!


அன்பன்.,
க.அண்ணாமலை.,

Annamalai said...

வாழ்த்துகின்றேன்..!!! உளமார..!!

தாமரையில் விழிசெய்து
தளிர்மலரில் முகம்செய்து..!!
காமனுக்குப் போட்டியனாய்
கதிரழகு படைத்திட்டோன்..!!
வானமுக வீதியிலே
வந்திறங்கும் வேளையிலே..!!
கானமி சைத்தபோதே
கண்ட தேவதை இவளோ..!!

ஆனபடி ஆகிவிட்ட
தனைத்தும் நன்மையிலே..!!
தானதவம் மட்டுமல்ல
காதலுமுலகைக் காக்கும்..!!
போனகதை புதுக்கதை
வந்தகதை யாவையுமே..!!
சேனைகாத்து நிற்குமிந்த
உறவிதனால் வலுப்பெறட்டும்..!!

காதலும் வீரமும் தமிழரின்
இரு கண்களப்பா..!!
கண்போலே கொண்டவளைக்
காத்திடவும் வேண்டுமப்பா..!!
ஏடுபடித்தோங்கி இறை
நட்பு வளர்த்திட்டாலும்
வீடுகாத்து நின்றாலே இறை
வீட்டிற் கிணையப்பா..!!

தேனிற்குழைத் தமுதத்
தெய்வப்பா வெனவே..!!
நாணம் கொண்டு நிற்கும்
நல்முத்தாய் மோகனமும்-அன்பு
பாணம் தொடுத்து நிற்கும்
இளம்வழுதியும் கைகோர்க்க..!!
வாணம்கிளப்பி இதை
வாழ்த்தியாம் மகிழ்கின்றோம்..!!

சூரியனுஞ் சந்திரனும்
சுடர்விளக் கேந்தி நிற்க..!!
மாரியுஞ் சகுனம் பார்த்து
மறந்தேதான் தேங்கி நிற்க..!!
பேரின்பம் நிறைந்து பல
பெரு நூற்றாண்டுகளாய்!!
பாரில் இன்புற்றிடவே யாம்
பாக்கள்கொண்டு வாழ்த்துகின்றோம்..!!தமிழர் வரைவின் படிநீர் வாழ்ந்து
தழைத்திட வேண்டும் புவியில் நூறாண்டு..!!
தென்றற்காற்றும் உமையே கூறி
தேனாய் மக்களைத் தழுவுது பாரீர்..!!
தொன்மைப்பாக்கள் மங்கலம் பாடி
தொலைவில் வாழ்த்தி ஒலிக்குது கேளீர்..!!
செண்பக மலர்கள் மல்லிகையோடு
சேர்ந்தே மகிழ்வாய்க் குலுங்குது காணீர்..!!

கெட்டிமேளங்கள் கொட்டி யிசைக்க..!!
மெட்டியை ஏற்று மெல்லிடையாள் வர..!!
தொட்டு அணைத்தே உளத்தில் நிறுத்தி...!!
கட்டுக் கோப்பாய் வாழ்க்கை வாழ்வீர்..!!
கேடற்றெந்நாளுங் கிளைஞர் செழிக்க..!!
உடலுமுயிருமாய் ஒன்று கலந்தின்புற்று..!!
தொட்டிடவேபல சிகரம்நாளும் .!!வாழ்த்திக்
கொட்டுகிறேன்மங் கலநாத மேளம்..!!


அன்பன்.,
க.அண்ணாமலை.,

Dubai, U.A.E

Elaya said...

திருமணவாழ்த்து..!!!

இரண்டு மரம் நட்டு வைத்தார்
இடையில் ஏன் இளம் மங்கை நிறுத்தி வைத்தார்..!!
அலைபாயும் கண்கள் கொஞ்சம்
அணைபோட்டு நிறுத்திக்கொள்ளும்..!!!
புரிந்து கொண்ட உள்ளம் இரண்டு
புதுவாழ்வைத் தொடங்கிச் செல்லும்..!!

வரவேற்பின் மன(ண)ம் மகிழ்ந்து
சுற்றமும் நட்பும் கூடிக்கொள்ள
பின்வாசல் குருவி ஒன்று
தாவணியில் மின்னிச் செல்லும்..!!

கருவறையில் வளர்த்த தீபம்
மணவறையில் ஒளிரக் கண்டு..!!
மழலை சொல் கேட்டே
மதிமயங்கிய உயிர் ஒன்றை
ஊடுருவும் கண்களுக்குப் புரிந்த
உண்மை புலப்படுமா கடவுளுக்கும்..!!

மணிமணியாய் வளர்த்த பிள்ளை
மணம் கொள்ளும் நாளை எண்ணி
சுருக்குப் பையில் முடிந்து வைத்த
ஒற்றை ரூபாய் உனக்கு மட்டும்..!!

வாழை இலை நீர் தெளித்து
வகைவகையாய் பரிமாறி
குடம் ஒன்றை பரிசளித்து
குலம் விளங்க வாழ்த்திச் செல்லும்
பெருமை எல்லாம் உம்மைச் சேரும்..!!!

அருகில் அமர்ந்திருந்தும் முன்
அறியாத தருணம் இது..!!
இனிவரும் காலத்திலும் சபை
காணாத நளினம் இது..!!
நான் என்ற எண்ணம் எல்லாம்
நாண் கொஞ்சம் மாற்றிப் போடும்..!!

தலைவி கரம் பிடிப்பாய் தலைவா..!!!
அடுத்த பிறவிக்கும் சேர்த்து..!!
ஒளியை வட்டமிடுக..!!
ஒளி வட்டம் ஆகட்டும் வாழ்க்கை..!!

பூங்கொத்தும் பொன் நகையும்
அனுபவமும் அலங்காரமும்
வாழ்த்து சொல்ல வரிசை கட்டும்
அயல் நாட்டு அருமை புரிந்து
என்னை கொஞ்சம் சேர்த்து கொள்வீர்..!!

அன்பு நண்பன்..!!!
இளையராஜா..!!
துபாய்..!!

கவிதை காதலன் said...

வாழ்த்துக்கள்.. என்றென்றும் வாழ்க வளமுடன்

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

இளவழுதி வீரராசன் said...

அண்ணாமலையான் அவர்களே,
நன்றிகள் பல பல

இளவழுதி வீரராசன் said...

என்றும் இளமையான என் இளையராஜா நன்றி சொல்லி உன்னை தள்ளி வைக்க விரும்பவில்லை. தொடர்வோம் நட்புடன், எழுதுவோம் தமிழின் உச்சம் தொடும் வரை

இளவழுதி வீரராசன் said...

அன்புக்கினிய அண்ணாமலைக்கு
அன்புடன் நன்றிகள் பல்லாயிரம்

இளவழுதி வீரராசன் said...

கவிதை காதலா!... என்
கவிதை காதலா? - உன்
வாழ்த்துக்கு நன்றி! - உன்
வருகைக்கு நன்றி!