மறத்தல் தகுமோ

உன்னை நீ மறக்க சொன்னாய் என்பதற்காக
உன்னை மறக்க நினைத்து; யதார்த்த
வாழ்வில் கால் பதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் - நீ
குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பாக
பள்ளிமாணவியின் பயமில்லா செயலில்
கல்லூரிமாணவியின் செல்ல சில்மிசங்களில்
இளமங்கைகளின் வெட்க நாணத்தில்
தாயின் பாசத்தில் பரிதவிப்பில்
தந்தையின் அன்பில் அக்கரையில்
ஆசானின் கண்டிப்பிலும் வழிகாட்டுதலிலும்
இப்படி என் எதிர்படும் எல்லோரின்
ஏதோ ஒரு செயலில் உன்னை
எனக்கு ஞாபகப்படுத்துகிறாயேடி - பிறகு
எப்படியடி உன்னை நான் மறக்க இயலும்?

1 comment:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

மறக்க நினைக்கும் ஒவ்வொரு கணங்களும், வாழ்கையில் நினைக்க மறக்கும் ஒவ்வொரு யுகங்கள்...

காதல் என்னவென்று தெரியாமல்
கால் வைத்துவிட்டு தவித்ததும்,
பிரிவு என்ருமென தெரிந்தும்
அன்பு வைத்துவிட்டு வருந்துவதும் - காதல்...