பிரியமானவளே!...

சாதி எனும் சம்பிரதாய சடங்குகளில் - என்
பிரியமானவளின் பிரிய காதலை
சமாதியாக்கிய என் அவல சமுதாயமே!...
பிரியமானவளின் கரங்களுக்குள்
பிரியமுடன் ஒருநொடி வாழ்ந்ததுண்டா?
பிரியமானவளின் மூச்சு காற்றை
பிரியத்துடன் சுவாசித்ததுண்டா?
பிரியமானவளின் நெருக்கத்தின் சூடு
பிரியத்துடன் அனுபவித்ததுண்டா?
பிரியமானவளின் நினைப்பே மகிழ்ச்சியடைய வைக்குமே
பிரியத்துடன் மனதில் அதை உணர்ந்ததுண்டா?
பிரியம் பிரியமானவளிடம் மட்டுமே வரும் - இதோ என்
பிரியமானவளிடம் நான் பிரியமுடன்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!..
வரும் தலைமுறையாவது தழைத்திட
சாதி மதமற்ற சமத்துவ காதலை
பிரியமுடன் வாழ வைப்போம்

7 comments:

malarvizhi said...

எங்கே தம்பியை சில நாட்களாக காணவில்லையே என்று நினைத்தேன் , வந்து விட்டீர்கள் . கவிதை நன்றாக உள்ளது.

malarvizhi said...

"பிரியம் பிரியமானவளிடம் மட்டுமே வரும்" நன்றாக உள்ளது . குறிப்பாக இந்த வரிகள் அருமை.

காயத்ரி said...

மிகவும் நன்று... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

கமலேஷ் said...

நன்றாக இருக்கிறது வெற்றிபெற வாழ்த்துக்கள்...

Pinnai Ilavazhuthi said...

மலர் அக்கா, காயத்ரி, கமலேஷ் உங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்

Thenammai Lakshmanan said...

மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்

Sakthi said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்