கலைந்து போன கனவுகள்

உறவுகளின் உந்துதலால்
காலத்தின் கட்டாயத்தால் - நீ
என்
கரம் பிடிக்கும் நாழிகை
காற்றோடு கலந்து விட்டாலும்
காரிகையே ...
கடக்க இருக்கும் காலங்களில் - உன்
வாழ்வில் வசந்தங்கள் சேர்க்க
வண்ணத்து பூச்சியாக உன்
வாசல் வந்து சேர்ந்திடுவேன்
நீ ...
மகிழ்வின் எல்லை சென்றிட
உன் மகளோ மகனோ
நம் எண்ணங்களுக்கு
உருவம் தந்து உயர்ந்திட
ஒவ்வொரு கணமும் - என்
முருகனை பிரார்த்தித்துக்கொண்டிருப்பேன்
கண்மணி ...
--வீ. இளவழுதி

No comments: