நீ வேண்டாமென ஒதுங்கி வாழ்ந்தாலும்... நெடுந்தூரம் ஓடி தொலைதூரத்தில் இருந்தாலும்.... ஆயிளுக்கும் உன் முகம் காணமுடியா சாபமிருந்தாலும்.... அடிமனசில் இன்னும் சிம்மாசனமிட்டு என்னை அவஸ்தை பட வைப்பதேனோ கண்மணி?....
குறிஞ்சி மலர் மலரும் போது
குதித்து கும்மாளமிட துடிக்கும் மனது...
பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை பூப்பதால் ...
பரவசப்பட்டு பனிப்புயலில் குதிக்கும் அணிலாய் - என்
மனம் கூதுகளிக்கிறது - உன்னோடு மீண்டும்
மனம்விட்டு பேசியது - பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து....
பதவிக்கு வந்து பத்துநாளில் பகட்டாக பவனி வரும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்... கால் நூற்றாண்டு அரசியலில் - இன்றும் கறைபடியா கரங்களுடன் வலம் வருகிறாய்!... இருமுறை சட்டமன்ற உறுப்பினராய் இருந்தும் இன்றும் எங்களுக்காக புல்லட்டில் பயணிக்கிறா...ய்!.... கட்சி பேதங்களை கடந்து தொகுதியின் கடைசி நிலை மனிதன் வரை சாதி மதம் பார்க்காமல் - உன்னில் சரிபாதியாய் எண்ணி... சடங்கு சம்பிரதாயங்களை ... துக்க சந்தோசங்களை ... உமதாக நினைத்து முதல்வனாய் - நீ முன்னின்று உரிமையுடன் இன்றும் செய்து வருகின்றாய்!..... அரசியலை எமக்கு கற்றுத்தந்த - எங்கள் ஆசானே!... உன் அரிசுவடி பற்றி என்றும் உங்கள் வழியில் பயணிப்போம்!...