இதயம் தொட்டவள்...

அதிராமல் வெளிப்படும் உன்
அன்பு வார்த்தைகளும்
கனிவான உன்
கருணை பார்வையும்
ஆப்பிள் கன்னமும்
அழகாய் அமைந்த
குடைமிளகாய் மூக்கும்
குண்டு கண்களும்
சின்ன உதடுகளில்
மெல்ல வழிந்தோடும்
உன் சிரிப்பும் - என்
சிந்தனைகளை சிதறடிக்கவில்லை!..
மாறாக
ஆயிரமாயிரம் கொளுசுகளில் - உன்
ஒத்தை கொளுசொலி - என்
உயிர் வாங்கி...
இதயத்தின்
அடி தொட்ட நாளில்...
அடியேன் உன்னிடம் - என்
ஆயுளை ஒப்படைத்தேனடி

5 comments:

கமலேஷ் said...

அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்...

தியாவின் பேனா said...

அருமை
நல்ல நடை
நல்ல பதிவு
வாழ்த்துகள்

இளவழுதி வீரராசன் said...

கமலேஷ், தியா உங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

//ஆயிரமாயிரம் கொளுசுகளில் - உன்
ஒத்தை கொளுசொலி - என்
உயிர் வாங்கி...
இதயத்தின்
அடி தொட்ட நாளில்...//

வித்தியாசமான கற்பனை வித்திட்டிருக்கின்றீர் தொடருங்கள் அருமை அருமை

இளவழுதி வீரராசன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சம்யுக்தா கீர்த்தி!.. தொடர்ந்து உங்களின் விமர்சனத்தை எதிர்நோக்குகிறேன்