கூந்தல்...

கருமேக கூட்டம் போன்ற
கடல் அலையை ஞாபகபடுத்தும் - உன்
கருநிற கூந்தலை காணும்போதெல்லாம்
களிப்புற்று இருந்தேன்!... ஏனோ
காளையிவனின் உள்ளமறியாமல்
காலத்தின் மேல் பழிசுமத்தி - என்
காதலை உதறி தள்ளியது போல - உன்
காற்றாட்டு கூந்தலை
கால் அளவுக்கு நறுக்கியதேனடி!..

5 comments:

malarvizhi said...

nalla kavithai. puthaandu vaazhthukkal.

கோ.வினோதினி said...

பாரதியின் கவிதை நடையை ஒற்றியுள்ளது. நல்ல கற்பனை.வாழ்த்துகள்.=)

இளவழுதி வீரராசன் said...

நன்றி மலர். புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி!.. தங்களுக்கும் எல்லா வகையிலும் சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

பாரதி அளவுக்கு இலக்கியமும் தமிழ் சொல்லாடையும் தெரியாது ஆயினும் தங்களின் இந்த வாழ்த்து இன்னும் நல்ல ஆக்கங்களை வெளிப்படுத்த உதவும். நன்றி வினோதினி

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

பெண்மைக்கு அழகு சேர்ப்பிக்கிறது கூந்தல் என்றால் கவிதைக்கு அழகு சேர்ப்பிக்கின்றன இந்த வரிகள்

இளவழுதி வீரராசன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சம்யுக்தா கீர்த்தி!.. தொடர்ந்து உங்களின் விமர்சனத்தை எதிர்நோக்குகிறேன்