பூண்டி அய்யா


(பழைய தஞ்சை மாவட்டத்துக்கு கல்வியை இன்றும் இலவசமாய் தரும் எங்கள் கல்வி தந்தை பூண்டி அய்யா  (தாளாளர், பூண்டி திரு புஷ்பம் கல்லூரி))


எளிமையின் திருஉருவே!..
எங்களின் குருவே!..
கற்றோருக்கு சென்ற
இடமெல்லாம் சிறப்பு - ஆனால்
உம்மால் வளர்ந்ததே
எம் சிறப்பு!...
காந்தி நம் தேசப்பிதா
நீங்கள் எங்களின் பிதா!...
கதர்சட்டைக்கு ஒரு
மரியாதை உண்டு
ஆனால் - நீங்கள்
அணிந்ததால் அது
காவியமாகிறது!..
உங்கள் பேச்சாற்றல்
எங்களை சிந்தனைவாதியாக்கியது!..
உங்களின் வாழ்வுமுறை
எம்மை சாதிக்கதூண்டியது!...
எவ்வளவோ எமக்கு
கற்றுதந்தீர்...
இவ்வளவும் உம்மிடம்
பயின்ற பின்பு
நாங்கள்
தலைநிமிரா விட்டால்
தவறில்லையா அய்யா?...
உங்கள் மாணவர்கள்
நாங்கள் - தலைநிமிர்ந்தே
நடப்போம் - உம்மின்
ஆசியோடும்...
வழிகாட்டுதலோடும்....

4 comments:

thiyaa said...

நல்ல கவிதை

உங்களுக்கு பதிலுறைக்க varification code இட வேண்டியுள்ளது அதை எடுத்துவிட்டால் பதிலிடுவது சுலபம்

malarvizhi said...

தாங்கள் பூண்டியின் மகனோ !!!!!!!!

நான் குந்தவை நாச்சியார் ஈன்ற மகள் .!!!!!!!!!!!! கவிதை அருமை !!!!!!!!!!!!!!

Pinnai Ilavazhuthi said...

தியா
verification code எடுத்துவிட்டேன். இனி உங்கள் நிறை/ குறைகளை தாரளமாக இடலாம்

மலர் அக்கா
//தாங்கள் பூண்டியின் மகனோ!
நான் குந்தவை நாச்சியார் ஈன்ற மகள்! //
தஞ்சை மக்களுக்கு மட்டுமே புரியும் வரிகள். பூண்டியின் மகன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.
வாழ்த்துதலுக்கு நன்றி!

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

//காந்தி நம் தேசப்பிதாநீங்கள் எங்களின் பிதா!...
கதர்சட்டைக்கு ஒரு
மரியாதை உண்டு
ஆனால் - நீங்கள்
அணிந்ததால் அது
காவியமாகிறது!.. //

அருமை
கற்பித்த ஆசிரியர்களை பள்ளியில் இருக்கும் போதே மதிக்காமல் இருக்கும் காலத்தில் இப்படியும் சில மாணவர்கள்

வாழ்த்துக்கள்

பூண்டி ஐயாவின் பணி தொடர வாழ்த்துக்கள் மேலும் அவருக்கு என் நன்றிகள்