நான் பிறந்த மண்...

காலை பனியில் கால்தடம் பதித்து

கவலையின்றி வயல்வரப்புகளில்

நெல்மனமும் மண்மணமும் நுகர்ந்து

நெருங்கிய தோழனோடு பகிர்ந்துண்டு

பள்ளி சென்ற காலங்களும் - விடுமுறையின்

பாதிபொழுதை குளத்திலும் மீதி நேரத்தை

விளையாட்டுமாய் வாழ்ந்த நாம்

வீரம்விளைந்த மண்ணில் பிறந்தவர்கள் அல்லவா..?

அதனால் தான்

உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு...,

உள்ளத்தில் ஒரு மகிழ்வு...,

என் மண்ணை நினைத்ததும்!


(இக்கவிதைக்கான விதையை தந்த மலர்விழி அக்காவுக்கு நன்றி)

3 comments:

நிலாமதி said...

மண் வாசனையோடு உங்கள்கவிதை அழகாய் இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் .ஆவலோடு காத்திருந்து படிப்பேன்.

MALARVIZHI said...

நன்றி இளவழுதி . உங்கள் கவிதை பிரமாதம் . தஞ்சை மண்ணிற்கு என்று ஒரு தனி சிறப்பு என்றுமே உண்டு . அது அந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு மட்டுமே புரியும். எனக்கு உங்களை போல் கவிதை எழுத வராது. வாழ்த்துக்கள் .

இளவழுதி வீரராசன் said...

நன்றி நிலாமதி. உங்களின் ஆசியோடு தொடர்ந்து எழுதுவேன்.
மலர் - முயற்சி செய்யுங்கள், நம் மண்ணிற்கு அந்த திறமை உண்டு.