திருமண நாள் 12-02-2014

எனக்கான எல்லா கஷ்டங்களையும்
உனக்கானது என ஏற்று கொண்டு
என் ஆயுளாக வந்தவளே!..
என் தாயாக மாறியவளே!...
உன்னோடு சேர்ந்து வாழ்ந்ததை  விட
இந்த  ஐடி அடிமை வாழ்வினால்
பிரிந்து வாழ்ந்த நாள்களே அதிகம்!...
இதோ வழக்கம் போல - இன்று நம்
திருமண நாளிலும் பிரிந்தே வாழ்கின்றோம்
என் வாழ்வில் மறுமலர்ச்சியை தந்தவளே!...
என் தலைவனை போல பம்பரமாய்
என்றும் நமது குடும்பத்துக்காக உழைப்பவளே!... 
இனியும் நமக்கு   இந்த இன்னல்  வாழ்வு
இருக்காது அன்பே!.. இதோ....
இன்னல் மறைந்து நமக்கான வாழ்வில் 
இளஞ்சூரியனாய் புது உதயம் பிறக்கிறது...
இந்த மணநாள் முதல்....
என் வாழ்வின் மகாராணியே...
எனது வாழ்வில் நீ வந்த  இந்த நாளுக்கும்
என் வாழ்வாய் அமைந்த உனக்கும்
எனது நன்றிகள்.... 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...!

எண்ணங்கள் நிறைவேறவும் வாழ்த்துக்கள் பல...

இளவழுதி வீரராசு said...


நன்றி ....
உங்களின் வாழ்த்துகளில் வளம் காணுவோம்

Rajkumar M said...

அற்புதமான வார்த்தைகள்