மறக்கத்தான் நினைக்கிறேன்...

மாற்றத்தான் நினைக்கிறேன்
லட்டு போன்ற எண்ணங்கொண்ட
தினவெடுத்த தோள்களை உடையவளை!.....
மறக்கத்தான் நினைக்கிறேன்
லகானை நோக்கி செல்லும் குதிரையை போல
தினம் உன்னை நோக்கியே வரும் என் எண்ணங்களை!...
மாறத்தான் நினைக்கிறேன்
லத்தி சுழலும் இடத்தை
திரும்ப பார்க்கும் போதெல்லாம்!.....
மாறத்தான் நினைக்கிறேன்
லாவகமான வார்த்தைகளால்
திரும்பிய பக்கமெல்லாம்...
நேசத்தை நேசித்தவளை - தன்
சுவாசத்தை நேசிக்க மறந்தவளை
நான் யோசிக்காமலிருக்க!.. ஆயினும்
திரும்பிய திசையெங்கும் உன்னை ஞாபகபடுத்தும் செயல்களும்
லட்சோப லட்சம் மக்களை பாக்கும் போது துளிர்விடும் ஆசையையும்
மறக்க இயலவில்லையடி!..

1 comment:

தஞ்சை.வாசன் said...

ஒருமுறை நினைத்த இதயம்... பிரிந்தாலும் மறக்காது நினைவுகளை...

மறக்க நினைக்க நினைக்க நினைத்துக்கொண்டேதான் இருப்போம்...


அருமை நண்பா...