என் பிறந்த நாள்

மனதுக்கு பிடித்தவர்களுடன்
மனதுக்கு பிடித்தமாதிரி
மற்றவர்களின் வாழ்த்துகளோடு
மகிழ்ச்சியாய் சென்றன - என்
கடந்து போன பிறந்த நாள்கள்

மனதுக்கு பிடித்த
மனைவியுடன் - என்
முதல் பிறந்த நாள்
மூச்சின் அடிநாதம் வரை
அந்த நாளுக்காக தவமிருக்க
ஆரம்பித்தேன்!...

ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புகள்
ஆவலை அதிகரிக்க - நவீன
அடிமை வாழ்க்கை வாழும்
அடியேனை அந்நிய தேசம்
அனுப்பியது விதி

உலகை அறிமுகபடுத்திய பெற்றோர் இல்லை
உடன் பிறந்தோரும் சுற்றமும் இல்லை
நல்லதொரு வாழ்வை பகிர்ந்து கொண்டிருக்கும் மனைவி இல்லை
நல்வழி படுத்திய நண்பர்கள் இல்லை


யாருமற்ற ஒரு தனி
யாத்ரிகனாய் முழு நாளும்
அலுவலகத்தில் தனிமையில்

அமைதியாய் கழிந்தது
என் பிறந்த நாள்

நான் வணங்கும் என் முருகனே
நாலு பேரு இல்லாமல்
நான் மட்டும் கொண்டாடும்
பிறந்த நாள் இனி வேண்டவே வேண்டாம்

5 comments:

தஞ்சை.வாசன் said...

நண்பா... கவலையே படாதீங்க அடுத்த வருடம் நாங்களும் கூட இருக்க முயற்சிக்கிறோம்...
இல்லையென்றாலும் தங்களின் பெயரினை சொல்ல பிறக்கும் குழந்தையுடன் பெற்றொர்களுடன் கொண்டாடிட என் முன்கூட்டிய நல்வாழ்த்துகள்...

தஞ்சை.வாசன் said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

வைகறை said...

Nice kavithai!

இளவழுதி வீரராசன் said...

nantri ennarumai nanbane
intha aantu unakkum inimaiyaka amaiya valththukkal


nantri nabar vaikarai avarkale...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தோழா....