மானமுள்ள தமிழா! உன்னை ஆளுவது ஒரு தமிழனா? நம் இனத்தை வேரறுத்தவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பா?
காமன்வெல்த் இறுதி நிகழ்ச்சியில் கொலைகாரனுக்கு கௌரவமா?
மத்திய அரசாங்கமா இல்லை எம் மானம் வித்து பிழைக்க விரும்பும் பிணந்தின்னி கூட்டமா?
உலக நாடுகளே, ஒரு இனத்தை அழித்த கொடுமைக்கு எந்த தண்டனையும் இல்லையா?
நாளை உங்கள் நாட்டுக்கு இது போல நடந்தாலும் இப்படிதான் அமைதியாக இருக்க போகின்றீர்களா
நமக்கு கொஞ்சமும் மானம் இல்லையா?
பதவிக்கும் பணத்துக்கும் இன்று நம் இன மானத்தை அடகு வைத்து நம்மை கவனிக்காதவர்கள் நாளை நம்மையும் கொன்று அல்லது விற்று விட எவ்வளவு நேரம் ஆகும்?
போராடினால் சிறைகளில் அடைப்பதால் எம் முன்னோர் தந்த வீரம் மழுங்காது,
மானங்கெட்ட எங்களை ஆளும் நபர்களுக்கு பின்னர் மனித நேயமுள்ள ஒருவன் வருவான் மானத்தோடும் அதே வீரத்தோடும் அன்று நீதி வெல்லும் எம் இனம் மீண்டும் தலை நிமிரும்.
5 comments:
தமிழன் என்றால் எதையும் தாங்குவான் அனுசரித்துப் போவான் என்ற நினைப்பு இந்த கொலைவெறிக் கூட்டத்தி்ற்கு. தமிழகத் தமிழனே நீ தமிழன் மானம் ரோசம் உள்ளவன் என்பதனை தெரிவிக்க ஒரே வழி வரும் தேர்தலில் இந்த அரசியல் அநாகரீகங்களை நிராகரிப்பது. இந்த வியாதிகளுக்கு துணை போகும் தமிழக அரசியல வாதிகளின் முகத்தல் கரிபூசுவது. அது தமிழகத்து தமிழர் கையிலுள்ளது. காலடியிலும் கடலிலும் தமிழன் செத்து மடிந்த போது குரல் எழுப்பாத தமிழக அரசியல வியாதிகள் எங்கோ தூரதேசத்தில் வம்பிழுத்து அடிவாங்கி மரணிக்கும் வடக்கத்தியருக்கு கூக்குரலிடுகிறார்கள். இனியாவது தமிழனே புரிந்து கொள்வாயா உன் நிலைமையை? யாழ்
மானங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு நாம் சரியான பதிலடி கொடுக்கும் நாள் விரைவில் வரும் தோழா..
என் எண்ணங்களை ஒத்துபோகும் உங்களுக்கு நன்றி சொல்ல விருப்பம் இல்லை. தமிழனாய் ஒன்றிணைவோம் தரணியை வென்றிடுவோம்
சாட்டையடி ஆதங்கம் நியாயமானதே!! ஒருமுறை வந்து பாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!
Its long time back visited ur blog.
Thala deepavali vazhukkal ungalukum mohanavukum
Elaya Raja
Dubai
Post a Comment