ஏமாற்றம்...

என் எண்ணங்களிலும்
சிந்தனைகளிலும் - நீ
இருந்ததினால் - என்
வாழ்வாய் வருவாய் என
எண்ணி இறுமாப்பு
கொண்டிருந்தேன்!...

என் எதிர்படும்
நேரங்களில் எல்லாம்
உன் உதட்டோர
புன்னகையால்
என்னுள் ஒரு
மாற்றத்தை ஏற்படுதி
என் வாழ்வின்
பரிணாமத்திற்கு வித்திட்டாய்
என் மார்தட்டி
மகிழ்ந்திருந்தேன்!...

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
ஏதோ ஒரு பொழுதினில்
ஏழிரண்டு மாதங்களாய்
என்னில் வசந்தத்தை
வரசெய்தவளே!...
உன் வாசல் வந்து
என் காதல்தனை சொல்ல
எத்தனித்த வேளையில்
அருகினில் இருந்தவனை
அழைத்து - என் காதலன் என
அறிமுகபடுத்திய நொடியினில்
கல் பட்ட கண்ணாடி
போலானதடி - உன்னை
சுமந்திருக்கும் என இதயம்!.....

2 comments:

வைகறை நிலா said...

கவிதை அழகு.. வலைப்பூவும் அழகு.. வாழ்த்துக்கள்.

இளவழுதி வீரராசன் said...

வைகறை நிலா
உங்களின் பாராட்டுக்கு நன்றி !...