வழிப்போக்கனின் வார்த்தைகள்...

தமிழ் போல என்னுள்

தங்கிய என் வேதமே !.... நிவேதமே!...

தன்னை பற்றி மட்டுமே

தனிப்படுத்தி காட்ட முயலும் - உலகில்

தாயைப்போல மற்றவர்களும்

தழைத்து வாழ வேண்டுமென

தவமிருப்பவளே!....

சோகங்கள் இங்கு பல உண்டு - ஆறுதல்

சொல்ல இயலாதவையும் சில உண்டு

இன்று - நானும்

உனக்கு ஆறுதல் சொல்ல

இயலாதவனாகவே உள்ளேன்!...

ஆயிரமாயிரம் பேர்

வார்த்தைகளில் ஜாலம் கோர்த்து

உன்னிடம் கொட்டி விட்டு சென்றாலும்

உன்னின் உண்மையான நேசம் மட்டும் - நீ

தோள் சாய்ந்து இளைப்பாற - உன்னை

அரவணைத்து தூக்கி விடும் -

அந்த தோழமையில் - நீ

அனைத்தையும் மறக்க வேண்டும்

புதிதாய் பிறந்ததாய் - எண்ணி;

சாதனைகள் நீ படைத்திட வேண்டும்

சரித்திரம் உன்னை பார்த்திட வேண்டும்

வார்த்தைகளை கோர்த்து உனக்கு

ஆறுதல் சொல்வதை விட

என் தோள் சாய்த்து அரவணைத்து

அழைத்து செல்லும் நட்பாக

இருக்க விரும்புவதால் சொல்கிறேன்

கவலை - நீ மறந்து ;

கணினியில் கரை கண்டிட

காலம் உன்னை போற்றிட

புதிய அத்தியாயம் - நீ படைத்திட

ஆறுதல் சொல்ல வந்த

வழிப்போக்கன் வாழ்த்துகிறேன்!...

- வீ. இளவழுதி

1 comment:

vino said...

Pala natkalaga.............
Angilam mattumae parthu vaeruthu pona intha kangalukku........verunthai amaithathu unathu padippugal.......
eeni intha virunthai thinamum :-)