நினைவுகள்...

புத்தகத்தில் மயிலறகு வைத்தால்
குட்டி போடும் என - என்
சிறு வயதில் கேள்விபட்டேன்
அது உண்மையா என தெரியவில்லை
ஆனால் - உன்
நினைவுகளை என்
மனதினில் வைத்தேன் அது
பல்கி பல குட்டி போட்டு
இன்று என் மனமெல்லாம்
உன் நினைவுகள்
மட்டுமே நிரம்பியுள்ளது

9 comments:

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

Pinnai Ilavazhuthi said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!.. தொடர்ந்து வாருங்கள்...

வைகறை நிலா said...

அழகான கவிதை..

** என் மனமெல்லாம்
உன் நினைவுகள்.. **

அற்புதமான வரிகள்..

Pinnai Ilavazhuthi said...

நன்றி வைகறை நிலா. தொடர்ந்து வாருங்கள். கருத்துக்களை தாருங்கள்

Anonymous said...

கவிதை எழுத உலகத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கு காதல் தவிர... அதையும் பற்றி கொஞ்சம் உங்கள் கற்பனையை ஓட விடுங்களேன்.... அன்பான வேண்டுகோள் ..

Pinnai Ilavazhuthi said...

தங்களின் கருத்துக்கு நன்றி மீனா.
எனது வலைப்பூவின் தலைப்பில் உங்களின் கேள்விக்கான பதில் அடங்கி உள்ளது. ஆமாம் இந்த வலைப்பூ காதலுக்காக மட்டுமே ஏனெனில் நான் காதலை காதலிப்பவன். அதற்காக மற்ற இயற்கை அழகுகளை ரசிக்க மாட்டேன் என்றில்லை.

இவன்
இயற்கையை ரசிப்பவன்
காதலை சுவாசிப்பவன்

மீண்டும் நன்றி உங்களின் வருகைக்கும் ஆரோக்கியமான கருத்துக்கும்.
தொடர்ந்து வாருங்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

காதல் என்னும் அசல்...நினைவு என்னும் வட்டியை பெருக்கி... சோகமென்னும் நட்டத்தை மனதுக்கு தந்துக்கொண்டு...

நல்லா இருக்கு நண்பா....

கவிதைகளை இங்கே வெளியீட்டு மாதங்களாகி விட்டன... பதிவு செய்யுங்கள்... உங்களின் இல்லறம் என்னும் நல்லறத்தில் புரியும் நிகழ்வுகளையும்... எங்கள் மனதிற்கு இதமாக... காதலின் சுவையாய் காட்டுங்கள்... சுமைகள் இருந்தால் குறையட்டும்...

தமிழ்போராளி said...

உங்கள் மனசை சுமந்த அந்த இதயத்துக்குதான் தெரியும் உங்களின் அன்பும் காதலும்... தொடரட்டும் உங்கள் கவிதை பயணம்..

Pinnai Ilavazhuthi said...

வாழ்த்துக்கு நன்றி வீரா மற்றும் ஸ்ரீனி