தேவதைக்கான கனவு...

முகம் கொண்டு பாராமல் என்
மூச்சு காற்றின் கடிவாளத்தை
மூன்றாண்டுகள் கையில் வைத்திருந்தவளின்
முகம் காணும் ஒரு ஏக்கம்

என் உலகத்தை தலைகீழாய்
புரட்டி போட்டு
புது வடிவத்தில்
அதே உலகத்தை
கானசெய்தவளை
காணவேண்டுமென்ற துடிப்பு

என்னின் எண்ணங்களை
என்னையறியாமலே
எடுத்து சென்றவளின்
எண்ணங்களுடன்
என்னை இணைத்துகொள்ளும்
ஒரு முயற்சி

இவையனைத்தும் நனவானது
இவனின் தேவதைக்கான
நேற்றைய கனவில்...


4 comments:

காயத்ரி said...

கனவு... இதமாயிருக்கிறது... அருமை...

இளவழுதி வீரராசன் said...

வருகைக்கும், தங்களின் கருத்துக்கும் நன்றி காயத்ரி

தஞ்சை.வாசன் said...

தேவதை அவள் மெய்யோ இல்லை பொய்யோ?... கனவோ இல்லை நினைவோ?...

மிகவும் அருமை நண்பா...

இளவழுதி வீரராசன் said...

நன்றி என் தோழனே!... இது போன்ற கருத்துக்கள் தான் இன்னும் எழுதும் ஊக்கத்தை தருகிறது