தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
ஒருசேர குழுமும் ஒருநாள்
புத்தாடை உடுத்தி - தம்வயலில்
புதிதாய் விளைந்த அரிசியினால்
தித்திக்கும் கரும்பு துணையிருக்க
திகட்டாத வெல்லத்துடன் - கொத்து
மஞ்சளும் முந்திரியும் திராட்சையும்
மனம் பரப்ப - விவசாயியின்
அனைத்து விளை பொருளும்
அடுப்படிக்கு வந்து சேர
குடிசை தொழிலை ஊக்குவிக்க
குழைத்த மண்கொண்டு செய்த
புதிய மண்பானையில்- மனமகிழ்ச்சியோடு
புதிதாய் பொங்கும் பொங்கல்...
சூரியனுக்கும் கால்நடைகளுக்கும்ஊருணிக்கும் ஊருக்கும் - என
எம்தொழிலுக்கு உதவும்
எல்லாருக்கும் நன்றி சொல்லி
ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்திட - இனியும்
ஏமாறாமல் நம் உரிமை காத்திட தமிழனாய் ஒன்றுபட்டு சபதமேற்று
தமிழர் திருநாளை கொண்டாடிட
அனைவருக்கும் வாழ்த்துகள்.. உறவுகளின் நினைவுகள்...
எல்லா இழப்புகளும்
எப்படியாவது நம்மை
அதன் தாக்கத்திலிருந்தும்
அந்த நினைவுகளிலிருந்தும்
மீட்டு விடுகிறது!..
வாழ்வின் போராட்டத்தால்..
வாழவேண்டிய நிர்பந்தத்தால்..
நண்பர்களின் நேசத்தால்..
நல்லவர்களின் பாசத்தால்..
மீண்டோ; மறந்தோ போகிறோம்
எல்லோரும் ஒருமித்து
எதிர்காலத்தை நோக்கி
நிகழ்காலத்தில் ஓடுகையில்
இறந்தகாலம் தந்த எல்லா
இழப்புகளும் மறந்துவிடுகிறது..
வாழ்வுதந்த தந்தை..
வழிநடத்திய அண்ணன்..
அரவணைத்த தாத்தாபாட்டி - என
அனைத்து உறவுகளின்
நினைவுகள் கூட
நிழல்படத்துடனே நின்றுவிடுகின்றன..
எப்படியாவது நம்மை
அதன் தாக்கத்திலிருந்தும்
அந்த நினைவுகளிலிருந்தும்
மீட்டு விடுகிறது!..
வாழ்வின் போராட்டத்தால்..
வாழவேண்டிய நிர்பந்தத்தால்..
நண்பர்களின் நேசத்தால்..
நல்லவர்களின் பாசத்தால்..
மீண்டோ; மறந்தோ போகிறோம்
எல்லோரும் ஒருமித்து
எதிர்காலத்தை நோக்கி
நிகழ்காலத்தில் ஓடுகையில்
இறந்தகாலம் தந்த எல்லா
இழப்புகளும் மறந்துவிடுகிறது..
வாழ்வுதந்த தந்தை..
வழிநடத்திய அண்ணன்..
அரவணைத்த தாத்தாபாட்டி - என
அனைத்து உறவுகளின்
நினைவுகள் கூட
நிழல்படத்துடனே நின்றுவிடுகின்றன..
எங்கள் தேசம்...
பல அடுக்கு மாடி
கட்டிடங்கள்...
பறந்து விரிந்த பசுமையான
தரைத்தளங்கள்....
குப்பை இல்லா தூய்மையான
சாலைகள்...
சாக்கடை இல்லாத சுத்தமான
வீதிகள்...
குளு குளு வசதியுடன்
பேருந்துகள்...
குறித்த நேரத்தில் வரும்
ரயில்கள்...
நடந்து செல்ல அனைத்து நிலைகளிலும்
நடைபாதைகள்...
விளையாட குறிப்பிட்ட தூரங்களில்
இடவசதி...
வீதிக்கு ஒரு பூங்கா...
வீட்டுக்கு அனுப்ப பணம்...
என எல்லா வசதிகளும்
இந்த அந்நிய தேசத்தில்
இருந்தாலும்....
அன்பாய் நேசம் விசாரிக்க
அண்டை வீட்டில் ஆளில்லை!...
அக்கறையாய் திட்ட எந்த
பெரியவர்களும் இல்லை!...
உறவுகளை வீட்டுக்கு கூப்பிட
உரிமை இல்லை!...
தடுமாறும்போது தூக்கி நிறுத்தும்
நண்பர்கள் இல்லை!...
அரவணைக்கும் சுற்றம் இல்லை!..
அன்பு கொள்ள பெற்றோர் இல்லை!...
குப்பையாய் இருந்தாலும்...
சாக்கடையில் நடந்தாலும்
எங்கள் தேசத்துக்கு நிகராகுமா
இந்த அந்நிய தேசம்!...
கட்டிடங்கள்...
பறந்து விரிந்த பசுமையான
தரைத்தளங்கள்....
குப்பை இல்லா தூய்மையான
சாலைகள்...
சாக்கடை இல்லாத சுத்தமான
வீதிகள்...
குளு குளு வசதியுடன்
பேருந்துகள்...
குறித்த நேரத்தில் வரும்
ரயில்கள்...
நடந்து செல்ல அனைத்து நிலைகளிலும்
நடைபாதைகள்...
விளையாட குறிப்பிட்ட தூரங்களில்
இடவசதி...
வீதிக்கு ஒரு பூங்கா...
வீட்டுக்கு அனுப்ப பணம்...
என எல்லா வசதிகளும்
இந்த அந்நிய தேசத்தில்
இருந்தாலும்....
அன்பாய் நேசம் விசாரிக்க
அண்டை வீட்டில் ஆளில்லை!...
அக்கறையாய் திட்ட எந்த
பெரியவர்களும் இல்லை!...
உறவுகளை வீட்டுக்கு கூப்பிட
உரிமை இல்லை!...
தடுமாறும்போது தூக்கி நிறுத்தும்
நண்பர்கள் இல்லை!...
அரவணைக்கும் சுற்றம் இல்லை!..
அன்பு கொள்ள பெற்றோர் இல்லை!...
குப்பையாய் இருந்தாலும்...
சாக்கடையில் நடந்தாலும்
எங்கள் தேசத்துக்கு நிகராகுமா
இந்த அந்நிய தேசம்!...
தலைவன்...
மன்னன் என்பவன்
தன்னலம் கருதாமல்
தன் மக்கள் நலம்
பேணியவன்!...
குடியாட்சியில் இன்று
தலைவன் என
முன்னிருத்த படுபவர்கள்
தன் குடும்ப நலமேமுக்கியமென நினைப்பவர்கள்!...
அவதரிக்கும் உண்மை தலைவனை..
மக்களுக்குக்காக தன் கட்சி மரியாதைகளை உதறித்தள்ளும்
மனிதனை - இக்காலம்
நமக்கு தருகிறது - அவர்களை நாம் தான் இனம் கண்டு
நாளைய நாயகனாய்
நம் இனம் வளர வாழநாம் போற்றி வரவேற்க வேண்டும்!..
என் கிராமம்...
( இது எனது வலைதளத்தில் 150 வது படைப்பு)
முப்போகம் விளையும் விவசாயம்
ஊரின் முகப்பிலிருந்து முடிவுவரை
பச்சை தரை விரிப்பாக
செழித்து விரியும் இயற்கை!..
ஊருக்கு நடுவில் ஒய்யாரமாய்
மேனிலை பள்ளி - அடுத்து
கூட்டுறவு வங்கியும்,
நுகர் பொருள் வங்கியும்..
கபடி, வாலி பால், கிரிக்கெட் என
எல்லா விளையாட்டிலும் பரிசினை
பெற்று வரும் மாணவ, வாலிபர்கள்..
மாவட்ட ஆட்சியர் முதல் கொண்டு
கடை நிலை ஊழியர் வரை
எல்லா அரசு பதவிகளிலும்...
கிளை செயலரில் ஆரம்பித்து
மாவட்ட செயலர், சட்ட மன்ற உறுப்பினர் என
அரசியலின் அனைத்து பதவிகளிலும்...
திருப்பூரில் தொழிலாளி முதல்
அமெரிக்காவில் விஞ்ஞானி வரை...
என எல்லா நிலைகளில் எம்மை
வளர்த்து விட்ட
எம் மண்ணை,
நம் கிராமத்தை,
நாமெல்லாம் மறந்தது சரியா
என் கிராமத்து உறவுகளே!...
ஊருக்கு மத்தியில் தவழும்
ராஜாமட கால்வாயின் உதவியால் முப்போகம் விளையும் விவசாயம்
ஊரின் முகப்பிலிருந்து முடிவுவரை
பச்சை தரை விரிப்பாக
செழித்து விரியும் இயற்கை!..
ஊருக்கு நடுவில் ஒய்யாரமாய்
மேனிலை பள்ளி - அடுத்து
கூட்டுறவு வங்கியும்,
நுகர் பொருள் வங்கியும்..
கபடி, வாலி பால், கிரிக்கெட் என
எல்லா விளையாட்டிலும் பரிசினை
பெற்று வரும் மாணவ, வாலிபர்கள்..
மாவட்ட ஆட்சியர் முதல் கொண்டு
கடை நிலை ஊழியர் வரை
எல்லா அரசு பதவிகளிலும்...
கிளை செயலரில் ஆரம்பித்து
மாவட்ட செயலர், சட்ட மன்ற உறுப்பினர் என
அரசியலின் அனைத்து பதவிகளிலும்...
திருப்பூரில் தொழிலாளி முதல்
அமெரிக்காவில் விஞ்ஞானி வரை...
என எல்லா நிலைகளில் எம்மை
வளர்த்து விட்ட
எம் மண்ணை,
நம் கிராமத்தை,
நாமெல்லாம் மறந்தது சரியா
என் கிராமத்து உறவுகளே!...
வாகை சூடும் தமிழன்
கர்நாடகாவில் காங்கிரஸ் வருமெனில்
காவேரி வற்றவும் செய்வோம்..
ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சிஎனில்
ஆத்திரப்பட்டாலும் பாலாறு வராது..
ஒருதொகுதி கிடைத்தாலும் கேரளாவில் -
ஒருசொட்டு வராது முல்லைபெரியாரில்..
மக்களின் எழுச்சியில் வேண்டாம் என்றாலும் எங்கள்
ம(ப)னம் கு(து)ளிர அனல்மின் நிலையம் தருவோம்..
தமிழன் எது கேட்டாலும் இல்லை என்போம்
தமிழ்மண்ணை பாதுகாப்பில்லா பரிசோதனைக்கு உட்படுத்துவோம்..
போராடும் தலைவர்களை உள்ளே போடுவோம்
பேட்டி தரும் தறுதலைகளுக்கு பெட்டி தருவோம்..
ஓட்டு போட்ட மக்களின் வாய்களுக்கு
பூட்டு போடுவோம்!.. மீறி போராடினால்
கொலவெறி பாடும் நடிகருக்கு
கொத்துபரோட்டா விருந்து வைப்போம்..
இன்னும் போராடினால் ஒரு நடிகையின்
இடுப்பை காட்டி கலாச்சாரம் காணமல் போனதென்போம்..
மானத்தோடு போராடும் தலைவன் கிடைக்கபெற்றால்
மறைந்திருந்து அந்த தலைவனை கொல்ல பார்போம்..
என்றெல்லாம் கொக்கரிக்கும் காங்கிரசின் தலைமைக்கு
எங்கிருந்தோ வந்தவர் தலைவியாம்...
மானமுள்ள மனிதர்களே இன்னும் நீங்கள்
மங்கி கொண்டிருக்கும் காங்கிரசில்
இருந்தால் குறித்துகொள்ளுங்கள்
இங்கிருந்து தான் உங்களின்
அழிவு ஆரம்பமாகிறது...
ஆண்ட தமிழன் தான் உங்களை
அடிச்சுவடு காணமல் விரட்ட போகிறான்
புறப்பட்ட மக்கள்படை புதிய
புலிப்படையாய் வெற்றி வாகை சூடும்
புதிய ஆண்டில், புது வெற்றியோடு!...
காவேரி வற்றவும் செய்வோம்..
ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சிஎனில்
ஆத்திரப்பட்டாலும் பாலாறு வராது..
ஒருதொகுதி கிடைத்தாலும் கேரளாவில் -
ஒருசொட்டு வராது முல்லைபெரியாரில்..
மக்களின் எழுச்சியில் வேண்டாம் என்றாலும் எங்கள்
ம(ப)னம் கு(து)ளிர அனல்மின் நிலையம் தருவோம்..
தமிழன் எது கேட்டாலும் இல்லை என்போம்
தமிழ்மண்ணை பாதுகாப்பில்லா பரிசோதனைக்கு உட்படுத்துவோம்..
போராடும் தலைவர்களை உள்ளே போடுவோம்
பேட்டி தரும் தறுதலைகளுக்கு பெட்டி தருவோம்..
ஓட்டு போட்ட மக்களின் வாய்களுக்கு
பூட்டு போடுவோம்!.. மீறி போராடினால்
கொலவெறி பாடும் நடிகருக்கு
கொத்துபரோட்டா விருந்து வைப்போம்..
இன்னும் போராடினால் ஒரு நடிகையின்
இடுப்பை காட்டி கலாச்சாரம் காணமல் போனதென்போம்..
மானத்தோடு போராடும் தலைவன் கிடைக்கபெற்றால்
மறைந்திருந்து அந்த தலைவனை கொல்ல பார்போம்..
என்றெல்லாம் கொக்கரிக்கும் காங்கிரசின் தலைமைக்கு
எங்கிருந்தோ வந்தவர் தலைவியாம்...
மானமுள்ள மனிதர்களே இன்னும் நீங்கள்
மங்கி கொண்டிருக்கும் காங்கிரசில்
இருந்தால் குறித்துகொள்ளுங்கள்
இங்கிருந்து தான் உங்களின்
அழிவு ஆரம்பமாகிறது...
ஆண்ட தமிழன் தான் உங்களை
அடிச்சுவடு காணமல் விரட்ட போகிறான்
புறப்பட்ட மக்கள்படை புதிய
புலிப்படையாய் வெற்றி வாகை சூடும்
புதிய ஆண்டில், புது வெற்றியோடு!...
வேறுபாடு..
உன்னை சிந்திக்கும் தருணங்களில்
உச்சம் தொடுகிறேன் - சாதனைகளால்!...
உன்னை சந்திக்கும் நேரங்களில்
அச்சம் அடைகிறேன் - சோதனைகளால்!... தலைவனின் பிறந்தநாள்
ஆளப்பிறந்த இனத்தின்
ஆணி வேறே!...
மும்முடி சோழனின்
முகவரியாய் திகழ்பவனே!...
கல்லணை கரிகாலனின்..
கம்பனின் தம்பியே!...
வள்ளுவனின் - எங்கள்
வரலாற்றின் புதல்வனே...
தலைவனாய் தரணியில் இருந்தாலும்
தம்பி என எல்லோராலும் அழைக்கப்பட்டவனே!
திரும்பிய பக்கமெல்லாம் அடிபட்டபோது
திருப்பி அடியென கற்றுதந்தவனே...
தமிழ் மண்ணில் நீ
தலையெடுத்ததும் தான்
மங்கி போய்கொண்டிருந்த எம்
ம(மா)னமும் தலைநிமிர்ந்தது...
உலக தமிழினத்தின் ஒரே
உயிர் அடையாளமே.. - நீ
வாழும் கால(கள)த்தில் - நானும்
வாழ்வதில் தனி கர்வம்கொள்கிறேன்
உன்னை வாழ்த்த வயதில்லை
உன்னை கவிபாட வாய்ப்பளித்த
தமிழுக்கும், நம் இனத்தின்
தலைவனான உனக்கும் - என்னின்
வணக்கங்களும்,.. வாழ்த்துக்களும்...
வாழ்க எம் தமிழ்!.. வாழ்க எம் தலைவன்!...
ஆணி வேறே!...
மும்முடி சோழனின்
முகவரியாய் திகழ்பவனே!...
கல்லணை கரிகாலனின்..
கம்பனின் தம்பியே!...
வள்ளுவனின் - எங்கள்
வரலாற்றின் புதல்வனே...
தலைவனாய் தரணியில் இருந்தாலும்
தம்பி என எல்லோராலும் அழைக்கப்பட்டவனே!
திரும்பிய பக்கமெல்லாம் அடிபட்டபோது
திருப்பி அடியென கற்றுதந்தவனே...
தமிழ் மண்ணில் நீ
தலையெடுத்ததும் தான்
மங்கி போய்கொண்டிருந்த எம்
ம(மா)னமும் தலைநிமிர்ந்தது...
உலக தமிழினத்தின் ஒரே
உயிர் அடையாளமே.. - நீ
வாழும் கால(கள)த்தில் - நானும்
வாழ்வதில் தனி கர்வம்கொள்கிறேன்
உன்னை வாழ்த்த வயதில்லை
உன்னை கவிபாட வாய்ப்பளித்த
தமிழுக்கும், நம் இனத்தின்
தலைவனான உனக்கும் - என்னின்
வணக்கங்களும்,.. வாழ்த்துக்களும்...
வாழ்க எம் தமிழ்!.. வாழ்க எம் தலைவன்!...
சகோதரி
சுகம்தானா என
ப்ரியமுடன் முகபுத்தகத்தில்
ரிதமாய் வினாவி
யாம் நலமென
ராஜ்ஜியத்தில் உள்ள
ஜனங்களுக்கு தெரியப்படுத்தி
என் கவிதைகளை இன்றும்
நினைவு கூர்ந்து
என் ரசிகையாய் என்றும்...
என் தோழமைகளையும்
நேசம் பாராட்டியதில்
என் தோழியாய் இன்றும்...
என் நேசத்தையும் சுவாசத்தையும்
நீயும் சுவாசிப்பதில்
என் சகோதரியாய் என்றென்றும்...
ப்ரியமுடன் முகபுத்தகத்தில்
ரிதமாய் வினாவி
யாம் நலமென
ராஜ்ஜியத்தில் உள்ள
ஜனங்களுக்கு தெரியப்படுத்தி
என் கவிதைகளை இன்றும்
நினைவு கூர்ந்து
என் ரசிகையாய் என்றும்...
என் தோழமைகளையும்
நேசம் பாராட்டியதில்
என் தோழியாய் இன்றும்...
என் நேசத்தையும் சுவாசத்தையும்
நீயும் சுவாசிப்பதில்
என் சகோதரியாய் என்றென்றும்...
மாவீரர் நாள்
தறிகெட்ட எம் வாழ்வு
தலைவனாய் நீ வாய்த்ததால்
திறம்பட நிமிர்ந்து
தமிழனை பெருமையாக
தரணியெங்கும் பார்க்க வைத்தது
உரிமைகள் மறுக்கப்பட்ட போது
உறக்கமின்றி நீ சிந்தித்ததால்
உதயமாயிற்று நம் புலிப்படை...
முப்படை கொண்ட
முதல் விடுதலையியக்கமாய் - எம்
முதல்வனாய் - நீ
உருமாறிய தருணத்தில் - நம்
உரிமைப் போராட்டத்தில்
உயிரையும் துச்சமென மதித்து
உயிரினும் மேலான தமிழுக்காய்
உயிரோடு வாழும் தமிழனுக்காய்
உயிர்நீத்த நம் மாவீரர்களுக்கு - நீ
உருவாக்கிய மாவீரர் நாளில்
எங்களின் சகோதரர்களை சகோதரிகளை
என்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து
எம் மண்ணை
எம் முதல்வனின்
தலைமையில் மீட்டெடுக்க
எம் மாவீரர் நாளில்
சபதம் எடுக்கிறோம்...
தலைவனாய் நீ வாய்த்ததால்
திறம்பட நிமிர்ந்து
தமிழனை பெருமையாக
தரணியெங்கும் பார்க்க வைத்தது
உரிமைகள் மறுக்கப்பட்ட போது
உறக்கமின்றி நீ சிந்தித்ததால்
உதயமாயிற்று நம் புலிப்படை...
முப்படை கொண்ட
முதல் விடுதலையியக்கமாய் - எம்
முதல்வனாய் - நீ
உருமாறிய தருணத்தில் - நம்
உரிமைப் போராட்டத்தில்
உயிரையும் துச்சமென மதித்து
உயிரினும் மேலான தமிழுக்காய்
உயிரோடு வாழும் தமிழனுக்காய்
உயிர்நீத்த நம் மாவீரர்களுக்கு - நீ
உருவாக்கிய மாவீரர் நாளில்
எங்களின் சகோதரர்களை சகோதரிகளை
என்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து
எம் மண்ணை
எம் முதல்வனின்
தலைமையில் மீட்டெடுக்க
எம் மாவீரர் நாளில்
சபதம் எடுக்கிறோம்...
Subscribe to:
Posts (Atom)








