
கவலைகளை மறந்து கண்மூடி
உறங்கும் நேரம் ....
பகலின் மற்றொரு முகமாம்
இரவினை ரசிக்கும் நேரம்...
நிலவின் தரிசனம்
காணும் நேரம்....
மலரின் அழகை வேறு
பரிணாமத்தில் பார்க்கும் நேரம்....
பறவைகளின் இசைக்கச்சேரி
கேட்கும் நேரம்...
அம்மாவின் தாலாட்டில்
குழந்தை உறங்கும் நேரம்....
இளையராஜாவின் இன்னிசையில்
கண்ணயரும் நேரம்...
ஐம்புலனுக்கும் சற்றே
ஓய்வழிக்கும் நேரம்...
ஆனால்
ஏனோ இவை எல்லாம் - என்
நினைவுக்கு வரவில்லை - உன்
குரல் கேட்கும் நேரம்
இது என்பதால்....
--வீ.இளவழுதி