உன்னோடு பேசுவது ஒரு நிமிடம் என்றாலும்
ஓர் ஆயுள் வாழ்ந்தது போன்ற நிம்மதி தந்தவளே
ஒரேயடியாக என்னை வஞ்சித்து என் காதலை
உன்னோடு எடுத்து சென்றவளே !... -பத்திரமாக பார்த்துகொள்
உன்னோடு வரும் என் காதலை மட்டுமாவது !...
அவசரத்தில் அள்ளி நான் அணைக்க
அச்சத்தில் நீ தவிக்க!.. - உன்
முந்தானை என் தோளில் துண்டு ஆக
முத்தங்களால் நாம் எச்சமானோம்!!...
முதல் முறையாய் மொத்தமாய்
முழு உலகை ஒன்றாய் ரசிக்கிறோம்!!!...
தேனின் சுவையைவிட
தென்மதுர தமிழின் சுவை
பெரிதென்று நினைத்திருந்தேன்!..
ஆனால் - இன்று சற்றே தடுமாறுகிறேன்...
உன் செவ்விதழின் சொல்லிலடங்கா சுவையா?
சந்தங்களின் சந்துகளில் வெளிப்படும்
என் தமிழ் சுவையா? - என்று!...