இப்பிறவியின் பயன்......
நம் வாழ்கைக்கான களம் அமைத்தவளே!.....
ஒரு முறை உந்தன் குரல் கேட்டால்
உயிருடன் வாழும் அர்த்தம் அறிவேனடி!....
ஒரு முறை உந்தன் திருமுகம் பார்த்தால்
இப்பிறவியின் பயன் அடைவேனடி!....
-- வீ. இளவழுதி
என் வாழ்வாக வந்தவளே....
முதல் தோழியானவளே - உன்
உயிர் வாங்கிய புன்னகையில் - நீ
என் வாழ்வில் முதன்மையானவளானாய்.....
உருண்டோடிய நாட்களில் - உன்
உண்மையான அன்பில் - உயிர்
கசிந்து உன் சிநேகிதனானேன்.....
என் வழிகாட்டுதலில்
வளம் காணுவதாக நீ
கூறிய நொடிகளில் - என்
வாழ்வில் மெல்ல மெல்ல
வசந்தங்களை கொண்டு வந்து
வாசம் செய்ய துவங்கினாய்.....
உனக்காக நான் செதுக்கிய
கவிதைகளை - நீ
படித்த நொடிகளில் ....
சிவந்த உன் கன்னங்கள்
மேலும் நாணத்தில் சிவக்க...
உன்னருகில் நானிருந்து உன்
வெட்கத்தை ரசித்த நொடியில் - நீ
என் காதலியாக மாறிப்போனாய்.....
உன்னோடு நான் சென்ற
இடங்கள் எல்லாம் - உன்
வருகையால் மேலும்
அழகானதை - என்
கண்ணில் நீ
கண்ட காட்சியில் - என்
வாழ்வாக வாசம்
செய்ய துவங்கினாய் .....
அலுவலக நேரங்களில்
அலுவல் இல்லா நேரங்களில்
என்னருகில் நீயோ - இல்லை
உன்னருகில் நானோ ....
நமக்கான வாழ்வைப்பற்றி
மட்டுமின்றி வரம்பின்றி
நாம் விவாதித்த விசயங்கள்....
என்னைப்பற்றி உன் வீட்டாரும்
உன்னைப்பற்றி என் உறவுகளும்
உயர்வாய் மதித்த தருணங்கள்
என
இப்படியாக நம்மைப்பற்றி
சொல்ல ஓராயிரம் இருக்க....
காலதேவனின் இரக்கமற்ற.......
உறவுகளின் இதயமற்ற........
மனதிற்க்கு ஒப்பாத
காரணம் சொல்லி - நம்
கனவு வாழ்வை
மெய்ப்பட செய்யாத
சொந்தங்களும் பந்தங்களும்
நம்மை பிரித்த சந்தோசத்தில்
திலைக்க.....
எறும்புக்கு கூட தீங்கிழைக்காத - நீயும்
எவர் மனதும் புண்படாது வாழும் - நானும்
நமது காதலின் வெற்றியை
மற்றவர்களின்
சந்தோசத்துக்காக சமர்ப்பித்து
காலத்தை வெல்ல இயலாமல்
கரை ஒதுங்கிணோம்
இரு வேறு திசைகளில்
இருவரும்.........
-- வீ இளவழுதி
இப்பிறவி....
என் எண்ணங்களின்
விதையாக விளைந்தவளே!...
என் கற்பனைகளின்
உயிர் சிலையாக வளர்ந்தவளே!....
உன்னைப் படைத்ததால்
பிரம்மன் எனக்குள்
உன்னைப் பற்றிய
சிந்தனைகளை வைத்தானா?...
இல்லை என் உயிர்க்கனவிற்கு
உருவம் தர
உன்னைப் படைத்தானா?....
புரியவில்லை - ஆயினும்....
உன்னைப் பார்த்ததாலே
இப்பிறவியின் உண்மை உணர்ந்தேனடி !.....
--வீ.இளவழுதி
உயிர்த்தெழுகிறேன்....
மட்டுமே உன் சிரிப்பொலி
உணர்ந்தவன்....
முதல்முறை நேரில்
பார்த்தபோது....
மொட்டுகளில் இருந்து
மெல்ல.... மெல்ல....
விரியும் மலர்களின்
இதழ்களை போல - உன்
இதழ்களின் வழி - நீ
சிந்திய மெல்லிய புன்னகையில்
மெல்ல... மெல்ல....
உயிர்த்தெழுகிறேன்
என்னில் நான் மீண்டுமொரு முறை.....
--வீ. இளவழுதி, பின்னையூர்.
சின்ன ஆசை....
உன் மன கஷ்டங்களுக்கு மருந்திட்டு
மீண்டும் நீ மண்ணில் மகிழ்வுடன்
பவனி வரும் நொடி -
நான் கானவேண்டும்......
ஆறுதல் தேடும் உன்னருகில்
ஆல மரம் போலிருந்து
அனுதினமும் உன் வளர்ச்சிக்கு
ஊன்றுகோலாக -
நான் இருந்திட வேண்டும்.....
உலகத்து இன்பங்கள் அனைத்தும்
உன் ஒருத்திக்கே என தேடி பிடித்து
உன் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்
அந்த நொடியில் உன் முகத்தில் எழும்
சின்ன..... சின்ன.... சந்தோசத்தை
நான் கான வேண்டும்....
என்னருகில் நீ இருந்தால்
எல்லையற்ற சந்தோசம்
என உணரும்படி - உன்னை
நான் காத்திட வேண்டும் ....
இறுதியில்....
என் மனம் முழுதும்
இன்பங்கள் நிரம்பி - உன்
மடியில் தலை வைத்து
என் உயிர் பிரிய வேண்டும் .....
-- வீ.இளவழுதி
சமர்ப்பணம்
விழுந்த நேரங்களில்
என் தோள் தூக்கி;
தன் தோள் சாய்த்து;
என்னை வாழ்வின் பாதைக்கு
மீண்டு(ம்) வரச்செய்து..
வாழ வைத்த -
வாழ வைக்கும்;
என் உயிரினும் மேலான
என் நண்பர்கள்...
கார்த்தி சோழகர்,
ராஜா மழவராயர் மற்றும்
ராமமூர்த்தி தேவர்
ஆகியோருக்கு
இந்த வலை பக்கத்தை
சமர்ப்பிக்கிறேன்.....
-- வீ. இளவழுதி காளிங்கிராயர்
ரயில் பயணத்தில்
சன்னலோர இருக்கையில் அமர்ந்து -
சலனமில்லா என் மனம் இயற்கையை
ரசித்து வருகையில்..... இடையில்
ஏதோ ஒரு சலனம் - என
சற்றே தலைதிருப்ப
தொட்டுவிடும் தூரத்தில் - என்
எதிரில் அமர்ந்திருந்தாய்...
என் வாழ்வே இயற்கையைபோல
இங்கிருக்க எதைதேடி
இத்தனை நாளாய் அலைந்தேன் - என
என்னுள் இறுமாப்பு கொண்டு
எனக்கு கிடைத்த வாய்ப்பில்
என் காதலை உன்னிடம் சொல்ல...
என்ன காரணத்தாலோ
உன் கண்ணிலிருந்த காதலை
கடைசி வரை என்னிடம் சொல்லாமலே
சென்றதேன் கண்மணி.....
--வீ.இளவழுதி
வரம் தருவாயா அண்ணா...
உயிராய் உன்னை ஒரு முறை
பார்க்க ஆசை
உடன் பிறந்தவனே வருவாயா ....
வரம் தருவாயா ....
அண்ணா...
நிகழ்கால வாழ்வானாலும்
சாதனைகளே உன்
கற்பனையில் ஊறி
வாழ்வை வென்றாய்;
சாவை மட்டும் ஏன்
சாகடிக்க மறந்தாய்?
என் அண்ணா....
முதல் பார்வை
நானாக இருப்பேனோ
என்றும் தெரியாமல் ;
நான் தானா
என்றும் புரியாமல் ;
உன் வாழ்வில்
மறக்க இயலா
மங்கள நாளில்…
மலங்க மலங்க
முழித்து - நீ
பார்த்த அந்த - ஒரு
பார்வையை என்
வாழ்நாள் முழுக்க
மறக்க இயலாது தோழி.....
முதல் தரிசனம்....
மூன்றாண்டுகள் என் குரல்
மட்டும் கேட்டவள் - இன்று
முதல் முறையாக - என்
முழு உருவ தரிசனம் காண்கிறாள்;
முழுதாய் ஒரு வார்த்தை
பேச இயலாமல் ...
என் பயணங்கள்....
நெஞ்சமெல்லாம் உன்னை பற்றிய
எதிர்பார்ப்புகளும்.....
சிந்தனை எல்லாம் உன்
நினைவுகளுமாக....
தொடர்கிறது என் பயணங்கள்....
--வீ. இளவழுதி
உன்னால்.....
பழனியில் கண்டுபிடித்தார் முருக பெருமான்;
காணாமல் போன தனது ஆட்டை
ஆயிரமாயிரம் ஆடுகளுக்கு மத்தியில்
கண்டுபிடித்தார் ஏசு பெருமான்;
லட்சத்தி லட்சம் பெண்களில்
உன்னை மட்டும் கண்டு பிடித்தேன் - நான்;
இந்த வகையில் நானும் அவர்களுக்கு
சமமாகிறேன் - உன்னால் .....
இந்த ஒரு நொடிக்காக...
உறக்கம் வரவில்லை;
உறக்கம் வந்தாலும்
கனவு வருவதில்லை;
கனவு வரும்போதிலும் – அதில்
கண்மணி நீ வருவதில்லை – என
மன உளைச்சலில் மருகி;
அதிகாலையில் உறங்கி ;
தாமதமாய் எழுந்து;
அவசரகதியில் இயங்கி;
நெருசலில் சிக்கி;
வியர்வையில் நனைந்து;
மனம் வெறுத்து
அலுவலகம் நுழைகையில்
அருகினில் உன் தரிசனம்;
எல்லாம் மறந்து
ஒரு நிமிடம்
மனம் லேசாகிறது
புதிதாய் பிறந்ததாய்
என்னி மனம் கூதுகளிக்கிறது...
இந்த ஒரு நொடிக்காக...
இது போல ஓராயிரம்
இன்னல்களை கடந்து வரலாம்....
-- வீ. இளவழுதி
தேவதையின் தரிசனம்...
காற்றில் உந்தன்
குரல் கேட்டு
கற்பனையில் உயிர்
வளர்த்து - உன்னை
காணும் தருணத்திற்காக
வரம் வேண்டி...
இறைவன் சன்னதியில்
காத்திருக்க.....
வரம் தரும் அம்மனாக
வந்தாய் என்னருகில்...
வார்த்தைகளில் வர்ணம்பூசி
வரவழைத்தவன்- உன்னை
கண்ட தருணத்தில்
வாயடைத்து நிற்கிறேன்- பேச
வார்த்தைகளின்றி!....
-வீ. இளவழுதி, பின்னையூர்
முதல் கவிதை..
என்னின் முதல் கவிதை
உன்னின் கோபத்தி(தீயி)ல்
கருகிய போதும்
என்னிலிருந்து
கவிதைகள் பல பல
காற்றினிலே கலந்து
வருகின்றன – வசந்தமே
வாசிக்க நீயின்றி...
-- வீ.இளவழுதி
சாரல்....

கண்களுக்கு காவியம் நீ...
செவிகளுக்கு இன்னிசை நீ ...
நாவிற்கு அறுசுவை நீ ...
மார்கழியின் மறுவடிவம் நீ...
சித்திரையின் எதிர்பதம் நீ...
இயற்கையின் வரம் நீ...
எங்களின் தவம் நீ...
மலைகளின் கூந்தல் நீ...
மனைவியை மறக்கச்செய்பவலும் நீ ...
மழையின் மகத்துவம் நீ ...
அருவியின் அற்புதம் நீ...
சாரலின் அழகு ....
மலையிலா? .. அருவியிலா?
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
சாரலே...
நீ தான் அழகு....
--வீ.இளவழுதி
கரம் பிடிப்பேன் கண்மணி...
என்றென்றும் காத்திருக்கும் ....
உன்னை தீண்டாவிடிலும்
உன்
இதயத்தின் ஓரத்தில்
உன்னையும் அறியாமல்
ஒட்டியிருக்கும் -
என் பிம்பம்
என்றாவது கஷ்டப்படும்
நொடியில் நீ
தோள் சாய்ந்து இளைப்பாற
என்றென்றும் காத்திருக்கும் ....
--வீ.இளவழுதி
