தேனின் சுவையைவிட
தென்மதுர தமிழின் சுவை
பெரிதென்று நினைத்திருந்தேன்!..
ஆனால் - இன்று சற்றே தடுமாறுகிறேன்...
உன் செவ்விதழின் சொல்லிலடங்கா சுவையா?
சந்தங்களின் சந்துகளில் வெளிப்படும்
என் தமிழ் சுவையா? - என்று!...
நேராக சென்று இரு கோடுகளாக திரும்பும் உன் தலை வகிடினை போல இரு புறம் பிரிந்து இருக்கும் என் வாழ்க்கை பாதையில் எந்த புறம் செல்ல என வழி காட்ட வா என் வாழ்வே!
மின்சாரம் இல்லா அறைக்கு உன் புன்னகையால் வெளிச்சம் தந்தது போல.... எண்ணங்களிலும் மனதிலும் எராளமான குழப்பங்களுடன் திசை தெரியாமல் பயணிக்கும் எனக்கு வழி காட்டியாக வாழ்க்கை துணையாக வருவாயா?