இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எங்களை வழிநடத்தும் என் இனிய நண்பன் கார்த்தி சோழகரின் தந்தையும், எங்களின் பாசத்துக்குரிய அப்பாவுக்கு ....


கடந்துவந்த பாதையின் காயம் மறைத்து
காலம் தந்த ஞானத்தையும் அனுபவத்தையும்
கருத்துடன் எங்களிடம் பகிந்து - எங்களை
கண்ணியத்துடன் வாழ கற்று கொடுத்து
வாழ்வின் வழித்தடம் காட்டி - யாம்
வாழவேண்டும் என்ற வேகம் தந்து
எம்மின் வலிகளை உன் வலிகளாய் தாங்கி
எங்களின் வெற்றிக்கு மட்டுமின்றி - உழவர்களின்
வாழ்வின் உயர்வுக்கும் உறுதுணையாய் இருந்து பாடுபடும்
எங்களின் அப்பாவே!...
உங்களின் இந்த பிறந்த நாளில்
உங்களின் முருகனிடம் வரம் ஒன்று கேட்கிறோம்
ஆம்!.. ஆண்டவன் எமக்கொரு வாய்ப்பளித்தால் எம்
ஆயுளின் பாதி உமக்கே தருவோம்!...
வாழிய நீவிர் பல்லாண்டு பல்லாண்டு
நலமுடனும், வளமுடனும்
என்றும் உங்களின்
வழிகாட்டுதலில்
வளம் காணும்
வழுதி